ஐஐடிகளில் கவுன்சலிங், மாணவர் சேர்க்கை நடத்த கூடாது.. சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை ஐஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஐஐடியில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

SC stays counselling being held for admission to IITs

மேலும், கீழ் நீதிமன்றங்கள் ஐஐடி மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

தேர்வின்போது, ஹிந்தி மொழி, கேள்வித்தாளில் பிழை இருந்தபோதிலும், அனைத்து மாணவர்களுக்கும், 'கிரேஸ் மார்க்' வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம் தொடர்ந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.

இதனால் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
SC stays counselling being held for admission to IITs on a plea against allocation of marks to incorrect questions to all . IIT aspirants moved SC against grace marks granted to all students even though the mistake was only in Hindi question paper.
Please Wait while comments are loading...