செல்ஃபி வித் மப்ளர்மேன்... கேஜ்ரிவாலுடன் செல்ஃபி எடுக்க ரூ.500; விருந்தில் பங்கேற்க ரூ.20,000!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி ‘செல்ஃபி வித் மப்ளர்மேன்' என்ற திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன்படி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள ரூ. 500 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
விரைவில் டெல்லியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் செலவுகளுக்கான நிதி திரட்ட ஆம் ஆத்மி கட்சி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் திட்டம் ஒன்றை அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில ஆம் ஆத்மி மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் பெங்களூருவில் கூறுகையில், ‘ஜனவரி 11-ம் தேதி அரவிந்த் கேஜ்ரிவால் பெங்களூரு வருகிறார். அப்போது அவருடன் அமர்ந்து விருந்து சாப்பிட ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போல அரவிந்த் கேஜ்ரிவாலை ஊடகங்கள் 'மப்ளர்மேன்' என அழைக்கின்றன. எனவே கேஜ்ரிவாலுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 'செல்ஃபி வித் மப்ளர்மேன்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
ரூ.500 கட்டணம் செலுத்து பவர்கள் கேஜ்ரிவாலுடன் ஜனவரி 11-ம் தேதி 'செல்ஃபி' எடுத்துக் கொள்ளலாம். 25 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கேஜ்ரிவாலுடன் டீ பார்ட்டியில் பங்கேற்பார்கள்' என்றார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications