ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிடம் நர்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ விசாரணை: சொகுசுக் கப்பலில் போதை விருந்து?

Subscribe to Oneindia Tamil
தன் மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான் (வலது)
Instagram
தன் மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான் (வலது)

பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிடம் அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நர்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ ( என்.சி.பி.) விசாரணை நடத்தி வருகிறது.

அக்டோபர் 2-ம் தேதி சனிக்கிழமை இரவு மும்பை கடலோரம் நின்ற ஒரு சொகுசுக் கப்பலில் நர்கோடிக் கன்ட்ரோல் பீரோ ரெய்டு நடத்தியது. அப்போது அந்தக் கப்பலில் போதை பார்ட்டி நடந்துகொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஆர்யன் கான் உட்பட 8 பேரை என்.சி.பி. பிடித்து விசாரிக்கிறது. ஆர்யன் பிடிபட்டிருப்பதை என்.சி.பி. மும்பை இயக்குநர் சமீர் வான்கடே உறுதி செய்தார்.

https://twitter.com/PTI_News/status/1444562483327340544?s=20

ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், மூன் மூன் தமேச்சா, நுபுர் சரிகா, இஸ்மித் சிங், மோஹக் ஜஸ்வால், விக்ரந்த் சோக்கர், கோமித் சோப்ரா ஆகியோர்தான் கைது செய்யப்பட்டவர்கள் என்பதையும் என்.சி.பி. தெரிவித்துள்ளது.

https://twitter.com/ANI/status/1444542889598468096

நியாயமான விசாரணை நடக்கும் - என்.சி.பி.

மும்பை கடற்கரையோரம் ஒரு சொகுசுக் கப்பலில் நடந்ததாக சொல்லப்படும் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை விருந்து தொடர்பானது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாக வான்கடே தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என்று என்.சி.பி. தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட சில பணக்காரர்கள் தொடர்பு இதில் இருப்பதாகவும், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ANI/status/1444562957321392128

என்ன நடந்தது?

'கார்டெலியா என்ற கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி ஒன்று நடைபெறுவதாக என்.சி.பி. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆர்யன் கான்.
Instagram
ஆர்யன் கான்.

அந்த கப்பல் மும்பையிலிருந்து கோவாவிற்கு சென்று கொண்டிருந்தது. கப்பலுக்குள் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை போல சென்றனர். கப்பல் பயணம் தொடங்கியவுடன் பார்ட்டி தொடங்கியுள்ளது.

ஞாயிறன்று காலை போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சமீர் வாங்கடே, ஊடகங்களிடம் இதுகுறித்த தகவலை வெளியிட்டார்.இந்த பார்ட்டிக்கான கட்டணம் தலைக்கு 80 ஆயிரம் ரூபாய் என தெரியவந்திருப்பதாக சில ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் பற்றி கூறிய மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான அதுல் லோந்தே, குஜராத்தில் பிடிக்கப்பட்ட போதைப் பொருள்களுக்கு என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+