For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகதான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்- சரத் பவார்

Google Oneindia Tamil News

மும்பை: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுககும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார்.

மராத்தியில் வெளியாகும் லோக்சத்தா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இப்படித் தெரிவித்துள்ளார்.

மறுபக்கம் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் மோடிக்கு ஆதரவாக பேசி வந்தவர் பவார். ஆனால் திடீரென மோடியை விமர்சித்துப் பேசி வருகிறார். இது அவரது குழப்ப மன நிலையைக் காட்டுகிறதா அல்லது ஒரே நேரத்தில் இரண்டு ஜால்ரா அடிக்கப் பார்க்கிறாரா என்பது தெரியவில்லை.

லோக்சத்தாவுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியிலிருந்து...

தனிப்பெரும் கட்சி பாஜகதான்

தனிப்பெரும் கட்சி பாஜகதான்

தேர்தலுக்குப் பின்னர் பாஜகதான் தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும்.

2வது இடம்தான் காங்கிரஸுக்கு

2வது இடம்தான் காங்கிரஸுக்கு

காங்கிரஸ் கட்சிக்கு 2வது இடமே கிடைக்கும். இதுதான் நிஜம்.

3வது இடத்துக்கு ஜெ. மமதா முட்டி மோதுவார்கள்

3வது இடத்துக்கு ஜெ. மமதா முட்டி மோதுவார்கள்

3வது இடத்தைப் பிடிக்க ஜெயலலிதா, மமதா பானர்ஜி ஆகியோருக்கு இடையே கடும் மோதல் நிலவும்.

அடுத்த பிரதமரை இப்போதே கணிக்க முடியாது

அடுத்த பிரதமரை இப்போதே கணிக்க முடியாது

அடுத்து யார் பிரதமராக வருவார் என்பதை இப்போதே கணிக்க முடியாது. தேர்தலுக்குப் பிந்தைய நிலவரத்திற்கு்ப் பின்னர்தான் அது தெளிவாகும் என்று கூறியுள்ளார் பவார்.

அப்ப அது வேற வாயா...

அப்ப அது வேற வாயா...

ஆனால் திங்கள்கிழையன்று ஜால்னா என்ற இடத்தில் பிரசாரம் செய்து பேசிய பவார், மோடி நாட்டுக்கு மிகவும் அபாயகரமானவர் என்று கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம.

கொத்துக் கொத்தாக உயிர்களைப் பறித்தவர்

கொத்துக் கொத்தாக உயிர்களைப் பறித்தவர்

அக்கூட்டத்தில் பவார் பேசுகையில, 2002 குஜராத் கலவரத்தை எப்படி மறக்க முடியும். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரியும் குடும்பத்தினரும், இதர முஸ்லீம்களும் கொத்துக கொத்தாக கொல்லப்பட்டதை எப்படி மறக்க முடியும். மக்கள் மறப்பார்களா, மன்னிப்பார்களா... என்றார் பவார்.

English summary
Nationalist Congress Party chief Sharad Pawar has predicted that the Narendra Modi-led BJP will be the single largest party after General Elections. The Union Agriculture Minister has made many startling statements of late. He did a volte-face on the BJP PM nominee after maintaining that nobody had the right to question Modi's role in the 2002 Gujarat riots after the court had given him a clean chit and went back to attacking him saying how people could forgive him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X