For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடா இவை இந்திய ரயில்களா... ஆச்சரியகர மாற்றத்தைக் காணும் ரயில் பெட்டிகள்

Google Oneindia Tamil News

டெல்லி: அடடா இவை இந்திய ரயில்களா என்று பலரும் ஆச்சரியப்படும் வகையில் இந்திய ரயில்களின் முகம் அடியோடு மாறப் போகிறது. புத்தம் புதிய தோற்றம், அதி நவீன இன்டீரியர் என ரயில் பெட்டிகள் உருமாறப் போகின்றன.

இதற்கான மாடல் ரயில் ஒன்று டெல்லியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. அதை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேரில் பார்வையிட்டார்.

டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 24 பெட்டிகளுடன் கூடிய ரயில் இது. இந்த ரயிலை சுரேஷ் பிரபு முழுமையாக சுற்றிப் பார்த்து ஆலோசனைகளை வழங்கினார்.

உள்அலங்காரம்...

உள்அலங்காரம்...

ரயில் பெட்டிகளின் உள்அலங்காரத்தை முற்றிலும் மாற்றத் திட்டமிட்டுள்ளது ரயில்வே துறை. மேலும் புதிய வண்ணத்திற்கும் அது மாறவுள்ளது. புதிய வசதிகளையும் சேர்க்கவுள்ளது.

புதிய மாதிரி ரயில்...

புதிய மாதிரி ரயில்...

அனைத்து வகுப்புப் பெட்டிகளிலும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்த நிலையில் போபாலில் உள்ள ரயில் பெட்டி மறு சீரமைப்புத் தொழிற்சாலையிலிருந்து புதிய மாதிரி ரயில் வெளி வந்துள்ளது.

சுரேஷ்பிரபு ஆய்வு...

சுரேஷ்பிரபு ஆய்வு...

இந்த ரயில் தான் தற்போது மத்திய ரயில்வே அமைச்கத்தின் பரிசீலனைக்காக சப்தர்ஜங் ரயில் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதைத்தான் சுரேஷ் பிரபு சுற்றிப் பார்த்து ஆய்வு நடத்தினார்.

அதிநவீனமாக்கும் பணிகள்...

அதிநவீனமாக்கும் பணிகள்...

போபால் தொழிற்சாலையில் 111 ரயில் பெட்டிகளை அதிநவீனமாக்கும் பணிகள் ரூ. 31.5 கோடி செலவில் நடந்து வருகிறது. இதில் ஏசி பெட்டிகள், நான் ஏசி பெட்டிகள், முதல் வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள் உள்ளிட்டவையும் அடங்கும்.

சகல பெட்டிகளும்...

சகல பெட்டிகளும்...

பேன்ட்ரி கார், பொதுப்பெட்டிகள், 2ம் வகுப்பு பெட்டிகள் என சகல கோச்சுகளையும் இங்கு புதுப்பித்து வருகிறார்கள். புதிய ரயில் பெட்டிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் பிரமிக்க வைக்கிறது.

அதிநவீன டாய்லெட்...

அதிநவீன டாய்லெட்...

அதி நவீன டாய்லெட் இதில் ஒன்று. அதில் பெரிய சைஸ் கண்ணாடி, வாஷ்பேசின், வாட்டர் டேப், துர்நாற்றம் நீக்கும் வசதி, எக்ஸாஸ்டர் பேன், எல்இடி விளக்குள், டஸ்ட் பின் ஆகியவை அதில் இடம் பெறும்.

மேல் பெர்த்திற்கு படிகள்...

மேல் பெர்த்திற்கு படிகள்...

அனைத்து தூங்கும் வசதி கொண்ட பெர்த்துகளிலும் எளிதாக ஏறுவதற்கு வசதியாக படிகள் மாற்றியமைக்கப்படுகின்றன. இனிமேல் எளிதாக மேல் உள்ள பெர்த்துக்குப் போக முடியும்.

ஸ்னாக்ஸ் டேபிள்...

ஸ்னாக்ஸ் டேபிள்...

சைட் பெர்த் பயணிகளுக்கு வசதியாக ஸ்னாக்ஸ் டேபிள் வைக்கப்படும். சைட் லோயர் பெர்த்துக்கும் இது கிடைக்கும்.சைட் பெர்த் பயணிகளுக்கு வசதியாக ஸ்னாக்ஸ் டேபிள் வைக்கப்படும். சைட் லோயர் பெர்த்துக்கும் இது கிடைக்கும்.

நவீன ஜன்னல்...

நவீன ஜன்னல்...

முதல் வகுப்பு மற்றும் ஏசி கோச்சுகளில் ஜன்னல் நவீனமாக வடிமைக்கப்பட்டுள்ளது. மேலும் அழகிய திரைச் சீலைகளும் அதில் இடம் பெறும்.

அழகிய ஓவியங்கள்...

அழகிய ஓவியங்கள்...

அனைத்துப் பெட்டிகளும் அழகிய ஓவியம் உள்ளிட்ட அதி நவீன உள்அலங்காரத்துடன் அழகுபடுத்தப்படும். தீம் வைத்து பெட்டிகள் அலங்கரிக்கப்படும்.

டஸ்ட் பின்...

டஸ்ட் பின்...

அனைத்து ரயில் பெட்டிகளிலும் டஸ்ட் பின் வைக்கப்படும். எனவே பயணிகள் குப்பை போட ஜன்னல் வழியாக இனி அலை பாயத் தேவையிருக்காது.

எல் இ டி விளக்குகள்...

எல் இ டி விளக்குகள்...

அனைத்துப் பெட்டிகளிலும் இனி எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு பளிச்சென பெட்டிகளில் வெளிச்சம் பரவும். மேலும் பெட்டிகளுக்கு வெளிப்புறத்திலும் இனி எல்இடி விளக்கு பொருத்தப்படும்.

பாசஞ்சர் அட்ரஸ் சிஸ்டம்...

பாசஞ்சர் அட்ரஸ் சிஸ்டம்...

அனைத்து கோச்சுகளிலும் பாசஞ்சர் அட்ரஸ் சிஸ்டம், அதாவது பயணிகள் தகவல் வசதி அறிமுகப்படுத்தப்படும். எனவே யாரையாவது கூப்பிட வேண்டுமானால் இதைப் பயன்படுத்தி அழைக்க முடியும்.

சார்ஜிங் பாயிண்டுகள்...

சார்ஜிங் பாயிண்டுகள்...

அனைத்துப் பெட்டிகளிலும் மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயிண்டுகள் அதிகரிக்கப்படும். இதுபோல மேலும் பல்வேறு வசதிகள் இந்தப் புதிய பெட்டிகளில் இடம் பெறவுள்ளன.

English summary
Shri Suresh Prabhu inspected a Model Rake (a passenger carrying train with 24 coaches) with improved interiors, colour scheme, aesthetics and amenity fittings at Safdarjang Station, New Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X