நாரதா ஊழல் கேஸ்.. கொல்கத்தா ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியின் தலையீடு அதிகம்.. நீதிபதி பரபர கடிதம்
கொல்கத்தா: நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டால் தலையீடு அதிகமாக உள்ளது ஏன் என, உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதி கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் கடந்த 2014ம் ஆண்டில் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர் லஞ்சம் பெற்றதை நாரதா டி.வி. சேனல் அம்பலப்படுத்தியது. நாராதா சேனல் ஊழியர்கள், தங்களை போலியான நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளாக சொல்லிக்கொண்டு, அமைச்சர்களை அணுகி உள்ளனர். தங்கள் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று லஞ்சம் கொடுத்துள்ளனர்.
இதனை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டதை வீடியோவாகவும் அவர்கள் பதிவு செய்து கொண்டனர். அப்போதைய மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டர்ஜி ஆகியோர் நாரதா டிவி சேனல் ஊழியர்களின் வலையில் சிக்கினார்கள்.

கொல்கத்தா ஐகோர்ட்
அவர்கள் லஞ்சம் பெற்ற வீடியோவை கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா சேனல் வெளியிட்டது. இந்த 'நாரதா ஸ்டிங் டேப்' விவகாரம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2017ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

4 பேருக்கும் சிறை
இதனிடையே இந்த வழக்கில் சிக்கிய பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா ஆகிய 3 பேரும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆனார்கள். இதில் பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி ஆகியோர் மீண்டும் அமைச்சர்கள் ஆகி உள்ளனர். இந்நிலையில், சி.பி.ஐ. அமைப்பு குற்றப்பத்திரிகையை இறுதி செய்து, ஆளுநரின் அனுமதியுடன் அமைச்சர்கள் 3 பேர் உள்பட 4 பேரையும் கைது செய்தது. அவர்களுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால், சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டின் பேரில், ஜாமீன் உத்தரவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதனால் 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

ஐந்து நீதிபதிகள் அமர்வு
4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி சி.பி.ஐ மனு தாக்கல் செய்திருந்தது. கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டால் தலைமையிலான அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தது. கைதான நால்வரையும் வீட்டுச் சிறையில் வைக்க உத்தரவிட்டது. அவா்களுக்கு ஜாமீன் வழங்குவதில் நீதிபதிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்து ஏற்பட்டதால் 5 நீதிபதிகள் அமா்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

திரிணாமுல் தலைவர்கள்
இந்நிலையில் கொல்கத்தா ஐகோர்ட்டில் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்காக 4 பேரும் தலா ரூ.2 லட்சம் தனிநபர் பிணை தொகையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரணைக்கு காணொலி காட்சி வழியே கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டள்ளது. ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடிதம் எழுதிய நீதிபதி
இந்நிலையில் நாரதா ஊழல் வழக்கை ஐகோர்டிற்கு மாற்றியது, ஜாமின் தரமறுத்தது உள்ளிட்ட செயல்கள் மூலம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டால் ஏன் இவ்வழக்கில் அதிகமாக தலையிடுகிறார் என்று, அனைத்து நீதிபதிகளுக்கும் மூத்த நீதிபதி கடிதம் எழுதி உள்ளார். உயர் நீதிமன்றம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஆனால் நாம் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளோம். எனவே நம் விதிகளின் புனிதத்தன்மையையும், நம் எழுதப்படாத நடத்தை நெறிமுறையையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக, தேவைப்பட்டால், ஒரு முழு நீதிமன்றத்தை கூட்ட வேண்டும்" என்று நீதிபதி கடிதத்தில் வலிறுத்தி எழுதி உள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications