பட்டப்படிப்பு குறித்து தவறான தகவல் ஸ்மிருதி இரானிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு
டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது பட்டப்படிப்பு குறித்து தவறான தகவல் அளித்தது பற்றி தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்யவும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஸ்மிருதி இரானி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கல்வித் தகுதி பற்றி தவறான தகவலை வேட்புமனுவில் குறிப்பிட்டதாகக் கூறி எழுத்தாளர் அஹமர் கான் என்பவர் டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. மனான் கூறுகையில், 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவில் ஸ்மிருதி இரானி தான் 1996ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. முடித்ததாக தெரிவித்துள்ளார்.(கரஸ்பான்டஸ் கோர்ஸ்).
ஆனால் 2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில் டெல்லி பல்கலைக்கழகத்தில்(கரஸ்பான்டஸ் கோர்ஸ்) பி.காம். படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது அசையா சொத்துக்கள் குறித்து வேட்புமனுக்களில் தவறான தகவல்களை அளித்துள்ளார் என்று தெரிவித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கூறுகையில், ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி குறித்த வழக்குக்கு முகாந்திரம் இருப்பதால் விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்யலாம் என்று டெல்லி நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications