நாடாளுமன்ற சபாநாயகராக 'அக்கா' தேர்வு: எம்பிக்களுக்கு மகிழ்ச்சி
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் அன்புக்குறிய 'அக்கா' சுமித்ரா மகாஜன் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதில் எம்.பிக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாஜக கட்சியிலிருந்து தொடர்ந்து எட்டுமுறை எம்.பியான சுமித்ரா மகாஜனை எம்.பிக்கள் அக்கா என்றுதான் சொல்லி அழைப்பது வழக்கம். மத்திய பிரதேசத்தின் இந்தூர் மக்களவை தொகுதியில் இருந்து 1989ம் ஆண்டு முதல் தொடர்ந்து அடுத்தடுத்த நாடாளுமன்ற தேர்தல்களில் சுமித்ரா மகாஜன் எம்.பியாக பதவி வகித்து வருகிறார்.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1999 முதல் 2004வரை மத்திய இணை அமைச்சராக பணியாற்றி, மனிதவளம், தகவல் தொடர்பு, பெட்ரோலியம் போன்ற துறைகளை கையாண்ட அனுபவம் மிக்கவர். வக்கீலாக இருந்து அரசியல்வாதியாக மாறியதால் அரசியல் சாசனம் குறித்த அறிவு இவருக்கு அத்துபடி. இப்போது நடந்த தேர்தலில் 4.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எட்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்கு வந்தாலும்கூட இவர் யாரிடமும் அதிர்ந்து கூட பேசுவதில்லை. அனைவரிடமும் கனிவோடு நடந்துகொள்ளுவாராம்.
71 வயதான சுமித்ரா மகாஜன் மூத்த உறுப்பினர் என்பதால், அவரைவிட வயதில் இளைய எம்.பிக்கள் அனைவரும் 'சுமித்ரா தாய்' என்றுதான் மராத்தியில் அழைப்பது வழக்கம். அதாவது 'தாய்' என்றால் மராத்தியில் அக்கா என்று பொருள். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்ததால் மராத்தியில் இவ்வாறு அவரை அழைப்பார்கள். இப்போது தங்கள் பாசத்துக்குறிய அக்கா சபாநாயகராகியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பல எம்.பிக்கள் தெரிவித்தனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் நாடாளுமன்ற எம்.பிக்கள் பெயர் பட்டியலில் கூட 'சுமித்ரா மகாஜன் (தாய்)' என்றுதான் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications