2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு- 38 பேருக்கு தூக்கு-ராஜீவ் கொலை வழக்குக்கு பின் அதிரடி தீர்ப்பு
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் நாட்டில் முதல் முறையாக மிக அதிக எண்ணிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு ஜூலை 26-ல் அகமதாபாத் நகரில் 70 நிமிட இடைவெளிகளில் 22 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் மொத்தம் 56 பேர் உயிரிழந்தனர். மேலும் 240 பேர் படுகாயமடைந்தனர்.

77 பேர் கைது
இந்த தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 77 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அகமதாபாத், போபால், பெங்களூரு உள்ளிட்ட பல சிறைகளில் உள்ளனர். இவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைகள் நடைபெற்றன.

49 பேர் குற்றவாளிகள்
இவ்வழக்கில் கடந்த 8-ம் தேதி தீர்ப்பளித்த அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம், 49 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. மேலும் இவ்வழக்கில் இருந்து 28 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 49 பேருக்கான தண்டனை விவரங்களை சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

38 பேருக்கு தூக்கு- 11 பேருக்கு ஆயுள்
குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகப் பெரிய எண்ணிக்கையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

ராஜீவ்கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு
முன்னதாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 1998 ஜனவரி 28-ந் தேதி சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி தடா நீதிமன்ற நீதிபதி நவநீதன் 26 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார். பின்னர் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியானது. இந்த 7 பேரின் தூக்கும் ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications