விண்ணுலகம் சென்றார் "மயிலு".. "பிரியா"வுக்கு கண்ணீருடன் விடை கொடுத்த ரசிகர்கள்!
ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பையில் தகனம் செய்யப்படுகிறது.
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவியின் உடல் வில்லே பார்லேவில் உள்ள மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.
துபாயில் கடந்த வாரம் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து நேற்றைய தினம் எம்பாமிங் செய்யப்பட்டு இரவு அனில் அம்பானி அனுப்பிய தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள லோகன்ட்வாலாவில் உள்ள அவரது உடல் வந்தடைந்தது.

மூவர்ணக் கொடி
அந்தேரியில் உள்ள செலிபிரட்டிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலில் மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டது.

இடுகாட்டுக்கு புறப்பாடு
எனினும் 50 அடி தூரத்திலேயே ரசிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் முகத்தை பார்க்கமுடியாமல் ஏமாற்றமடைந்தனர். சம்பங்கி மலர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது இறுதி ஊர்வலம் அந்தேரியிலிருந்து 7 கி.மீ. தூரம் கொண்ட வில்லே பார்லே பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு புறப்பட்டது.

பார்க்க முடியவில்லை
ஸ்ரீதேவியின் உடலை கடைசியாக பார்க்க சாலையோரம் மக்கள் திரண்டனர். ஆனால் அவரது உடலை வெளியிலிருந்து யாரும் பார்க்க முடியாத அளவுக்கு வாகனத்தில் உடல் வைக்கப்பட்டது. இதையடுத்து மயானத்தில் சில சடங்குகள் செய்யப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி உடல் மாநில அரசின் முழு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

நீங்கா இடம்பிடிக்கும்
ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் என கண்ணீர் கடலில் மிதந்து சென்ற ஸ்ரீதேவி இன்றுடன் விடைபெற்றார். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications