Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 64 ரூபாயை கொடுத்தாலே ஒரு லிட்டர் பெட்ரோல்! நம்ம இந்தியன் ஆயில் பங்கில்.! ஆனா ட்விஸ்ட் இருக்கு

Subscribe to Oneindia Tamil

திம்பு: தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்துவிட்டது. ஆனால், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் ரூ.64க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்த வீடியோவை ஒருவர் பகிர்ந்துள்ள நிலையில், அது டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதாகப் பலரும் சொல்லி நாம் கேட்டிருப்போம். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.80 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Bhutan petrol offbeat

பெட்ரோல் விலை

இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாவட்டத்திற்கும் வரியைப் பொறுத்து மாறுபடும். ஆனால், பல மாநிலங்களில் பெட்ரோல் ரூ.100ஐ தொட்டுவிட்டது. அல்லது நெருங்கிவிட்டது என்பதே உண்மை. நாட்டில் எந்தவொரு பொதுத்துறை பெட்ரோல் நிறுவனத்தில் நீங்கள் பெட்ரோல் வாங்கினாலும் இதே நிலைதான். ஆனால், இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பெட்ரோல் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வெறும் 64 ரூபாய்க்கு பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆனால், அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கு.!

சமீபத்தில் நமது அண்டை நாடான பூடானுக்குச் சென்ற இந்தியர் ஒருவர், அங்கு பெட்ரோல் விலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். முகமது பூடானுக்கு வந்த அர்பாஸ் கான் என்ற நபர் அங்கு நமது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் பம்பைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அதிலும் அங்கு பெட்ரோல் விற்கப்படும் விலையைப் பார்த்து அவர் திக்குமுக்காடி போனார் என்பது அவரது வீடியோவை பார்த்தால் நமக்கே புரியும்.

பூடானில் எவ்வளவு

அந்த வீடியோவில் அர்பாஸ், "பூடானில் நான் பார்த்து ஆச்சரியமடைந்த விஷயம் இது. நான் இப்போது பூட்டானில் இருக்கிறேன்.. இங்கு நமது பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயிலின் பெட்ரோல் பம்புகள் உள்ளன. இவை இந்திய நிறுவனங்களின் பெட்ரோல் பம்புகள்.. ஆனால் இங்கு பெட்ரோல் விற்கப்படும் விலையை உங்களால் நம்பவே முடியாது" என்று கூறி அதன் விலையைக் காட்டுகிறார்..

பூடானில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.64 (ரூ. 63.92 பைசா)க்கு மட்டுமே விற்கப்படுவதாக அவர் குறிப்பிட்டு அதைத் திரையிலும் காட்டுகிறார். அட இது பூடானின் கரன்சியாக இருக்கலாம். அதன் மதிப்பு அதிகமாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், பூடானில் பயன்படுத்தப்படும் கரன்சியும் நமது ரூபாய்க்கும் கிட்டதட்ட ஒரே மதிப்பு தான். மேலும், இந்திய ரூபாயை கொடுத்தும் கூட நீங்கள் அங்குப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

ரூ.64 ரூபாயை கொடுத்தாலே கிடைக்கும்

அதன்படி பார்த்தால் நீங்கள் நமது இந்திய ரூபாயில் ரூ.64ஐ கொடுத்தாலே அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்கும். அதாவது இந்தியாவில் ரூ.100க்கு விற்கப்படும் பெட்ரோல் அங்கு வெறும் ரூ.64க்கு கிடைக்கிறது. எல்லைக்கு இந்த பக்கம் ஒரு லிட்டர் பெட்ரோல் பங்கு ரூ.100க்கு விற்கப்படுகிறது. ஆனால் எல்லையில் இருந்து சில கிமீ தொலைவில் பூடானில் வெறும் ரூ.64க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ஏன்?

இந்தியாவில் இருந்தே பூடானுக்கு பெட்ரோல், டீசல் செல்லும் நிலையில் அங்கு மட்டும் எப்படி விலை இவ்வளவு குறைவு என்ற கேள்வி உங்களுக்கு வரும். நெட்டிசன்கள் சிலரும் அதே கேள்வியை எழுப்பியிருந்தனர். உண்மையில் நமது நாட்டில் பெட்ரோல் விலை இந்த ரேட்டிற்கு விற்கப்பட முக்கிய காரணமே வரி தான். பெட்ரோல், டீசல் மீது செஸ் உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படும் சூழலில், அதன் காரணமாகவே விலை அதிகமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+