For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பப்ளிக்... பப்ளிக்"... டெல்லி தேர்தல் முடிவு குறித்து பேசப்படாது... கட்சியினருக்கு சோனியா உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படு தோல்வி பற்றி காங்கிரஸ் கட்சியினர் பகிரங்கமாக விவாதிக்க வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு 3 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. காங்கிரச் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.

'Stop Squabbling in Public,' Sonia Gandhi Tells Congress Leaders After Delhi Debacle

இந்நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் அவர், ‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரம் வலிமையாக இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகள் பட்டியலிடப்படவில்லை. மேலும், தேர்தல் பிரசாரத்திற்கு என்னை அழைக்கவும் இல்லை. இதனால் தான் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோற்றுவிட்டது. அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

ஷீலா தீட்சித்தின் இந்த விமர்சனம் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் பி.சி. சாக்கோ அக்கட்சியின் தலைவர் சோனியாவிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் ஷீலா தீட்சித் கருத்து குறித்து சோனியா கடுமை காட்டியதாக தெரிகிறது.

மேலும், கட்சியின் தோல்வி குறித்து இவ்வாறு வெளிப்படையாக விமர்சனம் செய்வதை, மூத்த தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சோனியா கூறியதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Sonia Gandhi stepped in to stop open squabbling between senior Congress leaders after the party's decimation in the Delhi election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X