For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுல் பிரிட்டன் குடிமகனா? சு.சுவாமி புகாருக்கு காங். பதிலடி- ஆவணங்களையும் வெளியிட்டது!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன்; அவரது எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து ஆவணங்களை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.

Subramanian Swamy writes to PM demanding to strip Rahul's citizenship

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

ராகுல் காந்தி, பிரிட்டன் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். BACKOPS LIMITED என்ற இங்கிலாந்து நிறுவனத்தின் இயக்குநர், செயலராக ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார்.

Subramanian Swamy writes to PM demanding to strip Rahul's citizenship

இந்த நிறுவனத்தின் ஆவணங்களில் ராகுல் காந்தி, இங்கிலாந்து நாட்டு குடிமகன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 2003 முதல் 2009ஆம் ஆண்டு கால ஆவணங்களில் ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

Subramanian Swamy writes to PM demanding to strip Rahul's citizenship

இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆகையால் பிரதமர் நரேந்திர மோடி இதில் தலையிட்டு ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்; அவரது எம்.பி. பதவியையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

மேலும் ராகுல் காந்தி தொடர்பான ஆவணங்களையும் இச்சந்திப்பில் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டார்.

காங்கிரஸ் மறுப்பு

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடும் அந்த நிறுவனம் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அதில் ராகுல் காந்தி இந்திய குடிமகன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
BJP leader Subramanian Swamy wrote to PM Modi on Rahul Gandhi declaring himself as a citizen of United Kingdom with an address located in London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X