உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வார்த்தைகளை பறிக்க முயன்ற நிருபர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரி இல்லை... உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ

  டெல்லி: உச்சநீதிமன்றம் குறித்தும், தலைமை நீதிபதி குறித்தும் விமர்சன கருத்துக்களை அளிக்க முயன்ற நீதிபதிகளை செய்தியாளர்கள் கேள்விகள் மலைக்க வைத்தன.

  நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்திய நீதித்துறை வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் அந்த சந்திப்பில் நூற்றுக்கணக்கான செய்தியாளர்களும், டிவி சேனல் பத்திரிக்கையாளர்களும் கலந்துக்கொண்டனர்.

  Supreme court judges were facing plenty of question arrows from journos

  செய்தியாளர்களிடம் பேசிய செல்லமேஸ்வர், உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்று குற்றம் சாட்டினர். இதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள்,
  உச்ச நீதிமன்ற வரலாற்றில் நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கடந்த பல மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் அசாதாரண நிகழ்வுகள் நடப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

  இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் என்ன பிரச்சனை என்று நேரடியாக கூறாமல் நிர்வாகம் சரியில்லை என்ற வார்த்தையையே கூறிக்கொண்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து சூழ்ந்திருந்த செய்தியாளர்கள், என்ன பிரச்சனை, என்ன செய்தது நிர்வாகம், யாரிடம் இதற்குமுன் புகார் அளித்தீர்கள், அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றனர்.

  இதனால் ஒருக்கட்டத்தில் பதிலளிக்க முடியாமல் தவித்த நீதிபதிகள், உங்களுக்கு அதுதொடர்பான கடிதத்தை தருகிறோம், பொறுங்கள்... பொறுங்கள்... என்று கூறினர். இருந்தும் விடாத செய்தியாளர்கள், தலைமை நீதிபதி மீது உங்களுக்கு அதிருப்தி இருக்கிறதா என்றவுடன் இதற்கு ஆமோதிப்பதைப் போல நீதிபதிகள் தலையசைத்தனர். மேலும் வழக்குகள் ஒதுக்குவதில் அவர் பாராபட்சமாக நடந்துக்கொள்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  இதனைத்தொடர்ந்து கேள்விகளை செய்தியாளர்கள் அடுக்கிக்கொண்டே சென்றதால், ஒருக்கட்டத்தில் கடிதத்தை கொடுத்து விட்டு செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டனர்.

  நாட்டின் சக்தி மிக்க பதவியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், செய்தியாளர்களை நேரடியாக எதிர்க்கொள்வது என்பது அவர்களின் வாழ்க்கையில் மிக மிக அரிதான விஷயமாக கருதப்படுகிறது. இன்னும் கேட்டால் நடக்காத ஒன்றாகவே கருதப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Supreme court judges were facing plenty of question arrows from journos. They blamed the Supreme court Administration and Chief Judge Deepak Misra for the problems

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற