For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய ராணுவம் ருத்ரதாண்டவம் ஆடியபோது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது பிரதமர் மோடியின் மேற்பார்வையில் நடந்துள்ளது.

யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் புதன்கிழமை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம் திட்டமிட்டு செய்துள்ளது.

Surgical strike- 15 things you should know

இந்நிலையில் தாக்குதல் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன,

* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 7 தீவிரவாத முகாம்கள் செயல்படுவது குறித்து ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது

* 38 தீவிரவாதிகள் இருந்த 7 தீவிரவாத முகாம்களை உளவுத் துறையின் உதவியோடு ராணுவம் கண்காணித்தது

* பிம்பர்க், ஹாட்ஸ்பிரிங், கெல் மற்றும் லிபா செக்டார்கள் ராணுவத்தின் கண்காணிப்பில் வந்தன

* அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது

* தாக்குதல் நடத்தப்போவது குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

* அதிரடி தாக்குதல் நடத்துவது என ராணுவம் முடிவு செய்தது

* புதன்கிழமை இரவு கமாண்டோக்கள் விமானத்தில் சென்று பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்தனர்

* சரியாக இரவு 12.30 மணிக்கு தாக்குதலை துவங்கினர்

* கமாண்டோக்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்றனர்

* தரைப்படையினருக்கு விமானங்களில் இருந்த பாரா கமாண்டோக்கள் உதவினர்

* பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தாக்குதலை கண்காணித்தனர்

* எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டோரம் 2 கிலோமீட்டர் மற்றும் 500 மீட்டர் தொலைவில் இருந்த தீவிரவாத முகாம்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டன

* 7 தீவிரவாத முகாம்களையும் ராணுவம் தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்

* தாக்குதலை முடித்துக் கொண்டு ராணுவம் 4.30 மணிக்கு இந்திய எல்லைக்கு திரும்பி வந்துவிட்டது.

English summary
It was a major victory for India after the army carried out a successful surgical strike in which 38 terrorists and two Pakistan army soldiers were killed. It was a well planned operation and the terrorists in the camps on the Pakistan side of the Line of Control were kept under surveillance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X