For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட நிஜமாவே மனிதாபிமானந்தாங்க ! ட்விட்டர் மூலம் உதவி கோரிய இந்தியருக்கு சுஷ்மா உதவி !!

Google Oneindia Tamil News

டெல்லி: துபாயில் பாஸ்போர்ட் இன்றி சிக்கித் தவித்த இந்தியரை டுவிட்டர் மூலமாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காப்பாற்றியுள்ளார்.

துபாயில் பணிபுரியும் ஸ்ரீஜி சஞ்சய் என்பவர் இந்தியாவை சேர்ந்தவர். கவனக்குறைவால் அவர் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியதால் அவரை துபாய் போலீசார் கைது செய்தனர்.

sushma

இதையடுத்து ஸ்ரீஜி சஞ்சய் உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு ட்விட்டரில் தன் நிலை குறித்து விளக்கினார்.

அவருக்கு பதில் அளித்து சுஷ்மா ஸ்வராஜ் ஆறுதல் கூறினார். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள சுஷ்மா சுவராஜ், அதிகாரிகள் சிறிது நேரத்தில் துபாய் அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள் என்றும், அச்சம் கொள்ள தேவை இல்லை எனவும் ட்விட்டரில் பதில் அளித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளின் தீவிர முயற்சியால் சற்று நேரத்தில் ஸ்ரீஜி சஞ்சயின் தொலைந்து போன பாஸ்போர்ட் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து துபாய் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் துபாய் போலீசார் உடனடியாக ஸ்ரீஜி சஞ்சயை விடுவித்தனர்.

வெளிநாட்டில் போலீசில் சிக்கி தவித்த இந்தியரை மீட்க சுஷ்மா சுவராஜ் எடுத்த அதிரடி நடவடிக்கை அனைவருக்கும் "உண்மையை" உணர்த்தியுள்ளது.

English summary
Sushma Swaraj Helped through Twitter to an Indian Who Stranded in Dubai Without Passport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X