For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவைப் புரட்டிப் போடும் “பன்றி காய்ச்சல்” – இதுவரை 11 பேர் பலி!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவில் வேகமாக பரவி வருகின்ற பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திராவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து நேற்று வரையிலான 2 வார காலத்தில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேர் பலியானார்கள்.

இவர்களில் 7 பேர் காந்தி அரசு மருத்துவமனையிலும், 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள்.

Swine flu cases on rise in Andhra Pradesh

மேலும், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 136 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 8 பேர் ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தவிர தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சேர்ந்தனர். தெலுங்கானா மாநிலத்தில் தான் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிக அளவில் உள்ளனர்.

தற்போது குளிர்காலம் என்பதால் நோய் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறிய டாக்டர்கள் உணவுகளை சூடாக சாப்பிடுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

English summary
Swine flu coordinator for Andhra Pradesh and Telangana, K. Subhakar has claimed that the situation was under control despite the number of death cases due to swine flu have climbed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X