For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் "ஸ்டிராங் ஃபோர்ஸ்".. டாப் 10 ராணுவ வரிசையில் 4வது இடத்தில் இந்தியா!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களில் இந்திய ராணுவமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் சக்திவாய்ந்த 10 நாடுகளின் ராணுவங்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளது.

உலகின் சக்திவாய்ந்த 10 ராணுவங்களின் விவரம் வருமாறு,

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பட்ஜெட் மட்டுமே 612 பில்லியன் டாலர் ஆகும். அமெரிக்க அரசு செலவுகளை குறைத்துள்ள போதிலும் பாதுகாப்புத் துறைக்கு அதிகம் செலவு செய்கிறது. அமெரிக்க ராணுவத்தின் பலமே அதனிடம் உள்ள ஏராளமான போர்விமான தாங்கி கப்பல்கள் தான். அதனிடம் அதிநவீன போர்விமானங்களும் அதிக அளவில் உள்ளது. அதனிடம் 8 ஆயிரத்து 325 பீரங்கிகள், 1,330 ராக்கெட் ஏவும் கருவிகள், 13 ஆயிரத்து 683 விமானங்கள், 6 ஆயிரத்து 12 ஹெலிகாப்டர்கள், 10 விமானம் தாங்கி கப்பல்கள், 72 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 85 லட்சம் பேரல் எரிபொருள் உள்ளிட்ட எண் தயாரிப்புகளை ராணுவம் பயன்படுத்துகிறது.

ரஷ்யா

ரஷ்யா

2008ம் ஆண்டில் இருந்து ரஷ்ய ராணுவத்திற்காகும் செலவு அதிகரித்துள்ளது. இந்த செலவு அடுத்த 3 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய பாதுகாப்பு துறையின் தற்போதைய பட்ஜெட் 76.6 பில்லியன் டாலராகும். அதனிடம் 15 ஆயிரத்து 500 பீரங்கிகளும், 3 ஆயிரத்து 781 ராக்கெட் ஏவும் கருவிகளும், 3 ஆயிரத்து 82 விமானங்களும், 973 ஹெலிகாப்டர்களும், 1 போர்விமானம் தாங்கி கப்பலும், 63 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. ரஷ்ய ராணுவம் நாள் ஒன்றுக்கு 11 லட்சம் பேரல் எரிபொருள் உள்ளிட்ட எண்ணெய் தயாரிப்புகளை பயன்படுத்துகிறது.

சீனா

சீனா

சீன அரசு ராணுவத்திற்கு அதிக பணத்தை ஒதுக்கி வருகிறது. அதனுடைய பட்ஜெட் 126 பில்லியன் டாலர் ஆகும். அதனிடம் 9 ஆயிரத்து 150 பீரங்கிகளும், 1, 770 ராக்கெட் ஏவும் கருவிகளும், 2 ஆயிரத்து 788 விமானங்களும், 856 ஹெலிகாப்டர்களும், 1 போர்விமானம் தாங்கி கப்பலும், 69 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. சீன ராணுவம் நாள் ஒன்றுக்கு 40 லட்சத்து 75 ஆயிரம் பேரல் எரிபொருள் உள்ளிட்ட எண்ணெய் தயாரிப்புகளை பயன்படுத்துகிறது.

இந்தியா

இந்தியா

இந்திய ராணுவம் நவீனமாக்கப்படுவதால் அதன் செலவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா ராணுவத்திற்கென 46 பில்லியன் டாலர் செலவு செய்கிறது. பாகிஸ்தான் முழுவதையும் அல்லது சீனாவின் பெரும்பகுதியை தாக்கும் சக்தி கொண்ட ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளது. அதனிடம் 3 ஆயிரத்து 569 பீரங்கிகளும், 292 ராக்கெட் ஏவும் கருவிகளும், 1, 785 விமானங்களும், 504 ஹெலிகாப்டர்களும், 2 போர்விமானம் தாங்கி கப்பல்களும், 17 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. இந்திய ராணுவம் நாள் ஒன்றுக்கு 8 லட்சத்து 97 ஆயிரத்து 500 பேரல் எரிபொருள் உள்ளிட்ட எண்ணெய் தயாரிப்புகளை பயன்படுத்துகிறது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

2018ம் ஆண்டுக்குள் ராணுவத்தின் அளவை குறைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து ராணுவத்திற்கு 54 பில்லியன் டாலர் செலவிடுகிறது. இங்கிலாந்து ராணுவம் வரும் 2020ம் ஆண்டில் ஹெச்எம்எஸ் க்வீன் எலிசபெத் என்ற விமானம் தாங்கி கப்பலை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதனிடம் 407 பீரங்கிகளும், 56 ராக்கெட் ஏவும் கருவிகளும், 908 விமானங்களும், 362 ஹெலிகாப்டர்களும், 1 போர்விமானம் தாங்கி கப்பலும், 11 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. இங்கிலாந்து ராணுவம் நாள் ஒன்றுக்கு 11 லட்சம் பேரல் எரிபொருள் உள்ளிட்ட எண்ணெய் தயாரிப்புகளை பயன்படுத்துகிறது.

பிரான்ஸ்

பிரான்ஸ்

2013ம் ஆண்டில் பிரான்ஸ் தனது ராணுவத்திற்காகும் செலவை குறைத்துவிட்டது. அதிநவீன கருவிகளை வாங்க பாதுகாப்புத் துறை வேலைகளை 10 சதவீதம் குறைத்தது. பிரான்ஸ் ஆண்டுக்கு 43 பில்லியன் டாலரை பாதுகாப்பு துறைக்காக செலவு செய்கிறது. அதனிடம் 423 பீரங்கிகளும், 60 ராக்கெட் ஏவும் கருவிகளும், 1,203 விமானங்களும், 561 ஹெலிகாப்டர்களும், 1 போர்விமானம் தாங்கி கப்பலும், 10 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. பிரான்ஸ் ராணுவம் நாள் ஒன்றுக்கு 70 ஆயிரத்து 800 பேரல் எரிபொருள் உள்ளிட்ட எண்ணெய் தயாரிப்புகளை பயன்படுத்துகிறது.

ஜெர்மனி

ஜெர்மனி

ஜெர்மனி ஆண்டுக்கு 45 பில்லியன் டாலர்களை பாதுகாப்புத் துறைக்காக செலவிடுகிறது. ஜெர்மனியில் ராணுவத்தில் சேர்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை. அதனிடம் 408 பீரங்கிகளும், 252 ராக்கெட் ஏவும் கருவிகளும், 710 விமானங்களும், 401 ஹெலிகாப்டர்களும், 4 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. ஜெர்மனியிடம் போர்விமானம் தாங்கி கப்பல் இல்லை. ஜெர்மனி ராணுவம் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 57 ஆயிரம் பேரல் எரிபொருள் உள்ளிட்ட எண்ணெய் தயாரிப்புகளை பயன்படுத்துகிறது.

துருக்கி

துருக்கி

சிரியாவில் நடக்கும் பிரச்சனையால் துருக்கி தனது ராணுவத்திற்காகும் செலவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கி பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் 18.2 பில்லியன் டாலர் ஆகும். அதனிடம் 3 ஆயிரத்து 657 பீரங்கிகளும், 646 ராக்கெட் ஏவும் கருவிகளும், 989 விமானங்களும், 418 ஹெலிகாப்டர்களும், 14 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. துருக்கியிடம் போர்விமானம் தாங்கி கப்பல் இல்லை. துருக்கி ராணுவம் நாள் ஒன்றுக்கு 53 ஆயிரம் பேரல் எரிபொருள் உள்ளிட்ட எண்ணெய் தயாரிப்புகளை பயன்படுத்துகிறது.

கொரியா

கொரியா

வடகொரியாவிடம் இருந்து அடிக்கடி மிரட்டல் வருவதால் தென்கொரியா தனது பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை அதிகரித்துள்ளது. தென் கொரியாவின் விமானப்படை உலகின் 6வது மிகப்பெரிய படை ஆகும். அதனிடம் 2 ஆயிரத்து 346 பீரங்கிகளும், 250 ராக்கெட் ஏவும் கருவிகளும், 1, 393 விமானங்களும், 909 ஹெலிகாப்டர்களும், 14 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. தென் கொரியாவிடம் போர்விமானம் தாங்கி கப்பல் இல்லை. தென் கொரிய ராணுவம் நாள் ஒன்றுக்கு 48 ஆயிரத்து 200 பேரல் எரிபொருள் உள்ளிட்ட எண்ணெய் தயாரிப்புகளை பயன்படுத்துகிறது.

ஜப்பான்

ஜப்பான்

சீனாவுடன் இருக்கும் பிரச்சனையால் ஜப்பான் கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை அதிகரித்துள்ளது. மேலும் 40 ஆண்டுகளில் முதன்முறையாக அது தனது ராணுவத்தை விரிவுபடுத்தி வருகிறது. ஜப்பான் பாதுகாப்புத் துறைக்கு 49.1 பில்லியன் டாலர் செலவு செய்கிறது. அதனிடம் 767 பீரங்கிகளும், 99 ராக்கெட் ஏவும் கருவிகளும், 1,595 விமானங்களும், 671 ஹெலிகாப்டர்களும், 1 போர்விமானம் தாங்கி கப்பலும், 16 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. ஜப்பான் ராணுவம் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் பேரல் எரிபொருள் உள்ளிட்ட எண்ணெய் தயாரிப்புகளை பயன்படுத்துகிறது.

English summary
Above is the list of world's ten most powerful militaries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X