For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கு: முகமது ஆரிப்பை தூக்கிலிட சுப்ரீம் கோர்ட் தடை!

By Mathi
Google Oneindia Tamil News

Terrorist behind Red Fort attack will not hang for now, says SC
டெல்லி: 2000ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முகமது ஆரிப்பை தூக்கிலிடுவதற்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

டெல்லி செங்கோட்டைக்குள் கடந்த 200ஆம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதியன்று நுழைந்த 6 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் அங்கு ராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர் .இதில் 3 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு ஆரிப்பின் தூக்கு தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து ஆரிப் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ஆரிப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்நிலையில் ஆரிப் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தாம் 14 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டதாகவும் இதனால் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் ஆரிப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்ததுடன் இந்த மனுவை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு மாற்றியும் உத்தரவிட்டது.

English summary
The Supreme Court has said that a prisoner on death row who has been convicted for an attack on the Red Fort in Delhi will not hang for now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X