For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸின் நோக்கம் வென்றுள்ளது.. சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி.. ராகுல் காந்தி #AadhaarVerdict

Google Oneindia Tamil News

டெல்லி: ஆதார் கார்டை, மக்களுக்கான சக்தியாக கருதி அமல்படுத்தியது காங்கிரஸ். ஆனால் அதை கண்காணிப்பு சாதனமாக மாற்றப் பார்த்தது பாஜக அரசு. காங்கிரஸின் நோக்கமே சரி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

[அரசுக்கு கட்டாயம்.. தனியாருக்கு தேவையில்லை.. ஆதார் தீர்ப்பின் முழு விபரம்! ]

ஆதார் எண் தொடர்பான முக்கியத் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வெளியிட்டது. அதில் இதற்கு முன்பு வரைமுறையில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வந்ததை நிராகரித்து குறிப்பிட்ட சில அரசு சேவைகளுக்கு மட்டுமே ஆதார் எண் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Thank you Supreme Court for supporting the Congress vision, Rahul Gandhi

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து இரு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவட்:

காங்கிரஸைப் பொறுத்தவரை ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியரையும் வலுப்படுத்தும் சாதனமாகும். பாஜகவைப் பொறுத்தவரை அதை மக்களை கண்காணிக்கவும், ஒடுக்கவும் பயன்படுத்த முனைந்தது. காங்கிரஸின் நோக்கமே சரியானது என்று இன்று உச்சநீதிமன்றமே தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தி விட்டது. காங்கிரஸின் நோக்கத்தை காப்பாற்றியமைக்காக உச்சநீதிமன்றத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

வேலையில்லாத் திண்டாட்டம்:

ராகுல் காந்தி போட்டுள்ள இன்னொரு டிவீட்டில், நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார். அதில், பிரதமரின் கில் இந்தியா திட்டம். இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் நிறுவனத்திடமிருந்து ரூ. 30,000 கோடியைத் திருடி, விமானமே தயாரிக்கத் திறனில்லாத ஒருவரிடம் கொண்டு போய்க் கொடுத்துள்ளனர்.

அதேசமயம், திறமைகள் நிரம்பியுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் ராகுல்.

English summary
Congress President Rahul Gandhi has welcomed the Aadhaar Verdict. He said that, For Congress, Aadhaar was an instrument of empowerment. For the BJP, Aadhaar is a tool of oppression and surveillance. Thank you Supreme Court for supporting the Congress vision and protecting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X