For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முழுக்க முழுக்க பெண்களே இயக்கிய ஏர் இந்தியா விமானம்.. உலகை சுற்றி வந்து அசத்தல்

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, சாதனை நடவடிக்கையாக அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக் நாடுகள் என உலகம் முழுவதும் பெண் ஊழியர்களைக் கொண்டே ரவுன்ட் அடித்தது ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானம்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: மார்ச் 8-ஆம் தேதி உலக பெண்கள் தினத்தையொட்டி, கின்னஸ் சாதனை நடவடிக்கையாக முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் உலகையே சுற்றி வந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பேருந்து முதல் வானில் பறக்கும் விமானம் வரை பெண்கள் கையாண்டு வருகின்றனர்.

முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றிலும், வனத்துறை, உளவுத்துறை என பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அவர்கள் ஆண்களுக்கு நிகராக முன்னேறி வருகின்றனர்.

 சவால் பணிகளில்

சவால் பணிகளில்

ஒரு கட்டத்தில் சடலங்களை எரிக்கும் வெடியான் வேலைகளையும் குடும்பச் சூழ்நிலைக்காக பெண்கள் பார்க்கும் காலகட்டம் வந்துள்ளது. விமான போர் படை,ராணுவ போர் படை, கடற்படையின் போர் படை ஆகிய பிரிவுகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமானத்தில்

விமானத்தில்

இந்நிலையில் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8-ஆம் தேதியை முன்னிட்டு ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 27-ஆம் தேதி, டெல்லியில் இருந்து ‘போயிங்' ரக ஏர் இந்தியா விமானம், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது.

 முழுக்க முழுக்க பெண்களால்

முழுக்க முழுக்க பெண்களால்

அப்போது பசிபிக் நாடுகள் வழியாக சென்ற விமானம், திரும்பி வரும்போது, அட்லாண்டிக் நாடுகள் வழியாக உலகை சுற்றி வந்து டெல்லி வந்தடைந்தது. இந்த விமானத்தில் விமானிகள், ஊழியர்கள், சிப்பந்திகள், தொழில் நுட்ப பணியாளர்கள், ஓடு பாதை சோதனையாளர்கள், தரை கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்கள் என அனைத்து பிரிவிலும் முழுக்க முழுக்க பெண்களே பணியாற்றினர்.

 கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

உலகிலேயே முதன்முறையாக முழுக்க முழுக்க பெண்களை கொண்டு இயக்கப்பட்ட விமானம் என்ற சாதனைக்காக கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக ஏர் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

English summary
On the account of World Women's Day, the only lady staffs of Air India was travelled and operated the Boeing Aircraft throughout the world and applied for Guinness World Record.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X