ஆம் ஆத்மியில் இன்னொரு எம்.எல்.எ.வின் கல்விச் சான்றிதழும் டுபாக்கூர் தானாம்..
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் மற்றொரு எம்.எல்.ஏ.வும் போலி கல்விச் சான்றிதழ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
போலி கல்வி சான்றிதழ் வழக்கில் டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் பதவியை இழந்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் மற்றொரு பெண் எம்.எல்.ஏ.யான பவனா கவுர் மீது போலி கல்வி சான்றிதழ் புகார் எழுந்து உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ. வான பவனா கவுர் என்பவர் வேட்பு மனுவின் போது போலி கல்வி சான்றிதழ் கொடுத்துள்ளதாக சமரேந்திரா நாத் வர்மா என்பவர் டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், பாலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ பவனா கவுர் கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது வேட்புமனுவில் தான் பிளஸ் 2 முடித்ததாக கல்வி சான்றிதழ் கொடுத்தார். ஆனால் 14 மாத இடைவெளியில் நடைபெற்ற 2015 ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது அவர் தனது வேட்புமனுவில் பி.ஏ மற்றும் பி.எட் படித்ததாக கூறியுள்ளார்.
பி.ஏ. படிக்க 3 ஆண்டுகளும், பி.எட் படிக்க 2 ஆண்டுகளும் என 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் அவர் 14 மாத காலத்திற்குள் கூடுதலாக 2 பட்டப்படிப்பு படித்தாக கூறி வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி பெரு நகர நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி பங்கஜ் சர்மா இந்த புகாரில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு, வழக்கு விசாரணையை 25-ந்தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த விவகாரத்தையும் கையிலெடுக்க காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications