உங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை கணக்கெடுக்க ரெடியாகிறது மத்திய அரசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உங்களது ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தை புள்ளி விவரமாக சேகரிக்க உள்ளது மத்திய அரசு.

மத்திய அரசின் சேம்பிள் சர்வே அமைப்பு ஆண்டுதோறும் நுகர்வோர் செலவு குறித்த சர்வே நடத்துகிரது. நடப்பாண்டில் ஜூலையில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை சர்வே நடைபெறும்.

The government of India (GoI) wants to know your online shoping details

இந்த சர்வேயின்போது, இம்முறை உங்களின் ஆன்லைன் பர்சேஸ் குறித்தும் கேள்வி கேட்க உள்ளனராம். இந்திய இணையதள வர்த்தகம் கடந்த ஆண்டில் 14.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது மொத்த சில்லரை வணிக மதிப்பான 750 பில்லியன் டாலரை விட மிகவும் குறைவாகும். ஆனாலும், ஆன்லைன் வர்த்தகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.

தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் சீனாதான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்த கணக்கெடுப்பு 1.2 லட்சம் வீடுகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The government of India (GoI) wants to know your online shoping details starting next month.
Please Wait while comments are loading...