அமெரிக்காவில் எம்பிஏ.. காங்கிரஸை வளர்த்த ஹீரோ.. ராஜஸ்தானின் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்!
ராஜஸ்தானின் துணை முதல்வராக தேர்வாகி இருக்கும் சச்சின் பைலட் அம்மாநிலத்தின் இளமையான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் துணை முதல்வராக தேர்வாகி இருக்கும் சச்சின் பைலட் அம்மாநிலத்தின் இளமையான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் தொடர்வார்.
உத்தர பிரதேச மாநிலம் ஷரன்பூரில் 1977ல் பிறந்தார் சச்சின் பைலட். இவருக்கு 41 வயதுதான் ஆகிறது. இவர் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரை பரம்பரையாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள். மறைந்த முன்னாள் லோக் சபா உறுப்பினரான இவரின் அப்பா ராஜேஷ் பைலட் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார்.
[காங்கிரஸின் ஆணிவேர்.. நீங்க முடியாத நிழல்.. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒரு ஆலமரம்! ]

அமெரிக்கா
சச்சின் பைலட் டெல்லியில் மார்க்கெட்டிங் பிரிவில் பி.ஏவும், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வார்ட்டன் ஸ்குல் ஆப் பல்கலையில் எம்பிஏவும் படித்து இருக்கிறார். இவர் டெல்லி பிபிசி பிரிவு உள்ளிட்ட பல நிறுவனங்களில் அரசியலுக்கு வருவதற்கு முன் பணியாற்றி இருக்கிறார்.

காஷ்மீர் முதல்வர்
2004ல் சாரா அப்துல்லா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகள்தான் சாரா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.

லோக் சபா உறுப்பினர்
2009, 2014ல் இவர் லோக் சபா உறுப்பினராக தேர்வாகி உள்ளார். தற்போது நடந்த ராஜஸ்தான் தேர்தலில் டோன்க் தொகுதியில் இவர் 54,179 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

காங்கிரஸ் தலைவர்
2014 ஜனவரியில் இவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்தான் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் விஸ்வரூபம் எடுத்தது. அது தற்போது தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. இந்த நிலையில் கடின உழைப்பிற்கு பலனாக தற்போது ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications