For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தட்டு நிறைய சாப்பாடு.. மனசு பூராவும் நிறைந்து வழிந்த மனிதம்... !

Google Oneindia Tamil News

டெல்லி: இரக்கமே இல்லாதவர்கள்தான் இப்போது அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் கருணையின் வடிவாக காட்சி தருவோரும் கணிசமாக உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் அகிலேஷ் குமாரும் ஒருவர்.

அகிலேஷ் குமார் கேரளாவைச் சேர்ந்தவர். துபாயில் வேலை பார்த்து வருகிறார். ஒரு சிறிய விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது நடந்த சம்பவம் இது.

மலப்புரத்தில் உள்ளது ஹோட்டல் சபரினா. நாராயணன் என்பவர் இதை நடத்தி வருகிறார். டின்னருக்காக ஹோட்டலுக்குள் நுழைந்தார் அகிலேஷ் குமார். டேபிளில் அமர்ந்து சாப்பாட்டுக்குச் சொல்லி விட்டு உட்கார்ந்திருந்தார். அப்போது ஹோட்டல் ஜன்னல் வழியாக இரு ஜோடிக் கண்களைப் பார்த்து திடுக்கிட்டார்.

This Keralite gets surprised bill from hotel

அந்தக் கண்கள் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை ஏக்கத்துடன் பார்த்துப் பார்த்து பரிதவித்ததைப் பார்த்து அகிலேஷ் குமாருக்கு மனம் பதறிப் போனது. உடனே அந்த கண்களுக்குரியவரைப் பார்த்து உள்ளே வருமாறு அழைத்தார் அகிலேஷ் குமார். அது ஒரு சிறுவனும், அவனது தங்கையும். பேப்பர் சேகரித்து பிழைக்கும் வறிய நிலை சிறுவன்.

இருவரையும் உள்ளே அழைத்த அகிலேஷ் குமார் இருவரையும் உட்கார வைத்து என்ன வேண்டுமோ சாப்பிடுங்கள் என்று கூறினார். இதைக் கேட்டதும் அந்த சிறுவனுக்கு ஆச்சரியம், நம்ப முடியவில்லை அவனால். அகிலேஷ் குமாரின் தட்டை நோக்கி அவன் கையைக் காட்டினான். உடனே அண்ணனுக்கும், தங்கைக்கும் சாப்பாடு ஆர்டர் செய்தார் அகிலேஷ் குமார்.

சாப்பாடு வந்தது. அண்ணனும் தங்கையுமாக சாப்பிட ஆரம்பித்தனர். சிறுவன் சாப்பிட்டு முடித்தான். தங்கை இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை.

சிறுவன் கை கழுவ எழுந்தான். அப்போது அவனை கையைப் பிடித்து தங்கை இழுத்தாள். தானும் முடிக்கும் வரை காத்திருக்குமாறு அவள் உணர்த்தியதை உணர்ந்து சிறுவன் மீண்டும் அமர்ந்தான். பிறகு தங்கையும் சாப்பிட்டு முடித்ததும் இருவரும் சேர்ந்து கை கழுவப் போனார்கள்.

இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை ஒரு பேச்சும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூட இல்லை. சாப்பிட்டனர், சாப்பிட்டு முடித்ததும் சேர்ந்து போய் கை கழுவினார்கள். அப்படியே போய் விட்டார்கள். இத்தனையும் நடந்து முடியும் வரை அகிலேஷ் குமார் சாப்பிடவில்லை. அவர்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது தனது தட்டைப் பார்த்தார். சாப்பாடு அப்படியே இருந்தது. ஆனால் மனசு நிறைந்திருந்தது.

பிறகு தனது சாப்பாட்டை சாப்பிட்டு வயிற்றையும் அமைதிப்படுத்திய பின்னர் பில் கொண்டு வருமாறு சர்வரிடம் கூறினார். பில்லும் வந்தது. அதை எடுத்துப் பார்த்த அவருக்கு பட்டென்று கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.. காரணம். .அதில் எழுதப்பட்டிருந்த வாசகம்..!

அதில் இப்படி எழுதியிருந்தனர்.. "எங்களிடம் மனித நேயத்திற்குப் பில் போடும் மெஷின் இல்லை. நீங்க நல்லாருங்க...!"

ஹோட்டலில் இருந்தவர்களிடம் நன்றி சொல்லி விட்டு மிகுந்த மன நிறைவு + மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை விட்டு அகன்றார் அகிலேஷ் குமார்.

பணத்தையும், பகட்டையும் மட்டுமே பார்க்கும் உலகில் இப்படி மனங்களை மட்டுமே பார்ப்போரும் நிறையவே உள்ளனர்.. !

English summary
This Gentleman from Kerala has become a viral in FB after he showed his humanity towards two kids.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X