மேற்கு வங்கத்தில் 3-112 சீட்.. 10.2 - 37.4% வாக்குகள்.. மம்தாவை மிரளவைக்கும் பாஜக.. டைம்ஸ் நவ் சர்வே
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 10.2 சதவீதத்தில் இருந்து 37.4 சதவீதமாக வளர்ந்துள்ளதாகவும், பாஜக போன முறை 3 இடங்களை பெற்ற நிலையில் இந்த முறை 112 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ்- சி வோட்டர்ஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஒரு மாதம் முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி கேரளாவில் ஒரே கட்டமாகவும் அஸ்ஸாமில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 8 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மட்டும் மே 2ம் தேதி ஒரே நாளில் ஐந்து மாநிலங்களுக்கும் நடைபெற உள்ளது.

பாஜக சவால்
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும, பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. அங்கு காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் இணைந்து 3வது அணி அமைத்துள்ளன.

பாஜக அபாரம்
இந்நிலையில் டைம்ஸ் நவ்- சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 160 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த முறை 3 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக இந்த முறை 112 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டள்ளது. இடதுசாரிகள் கூட்டணி 22 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரள வைக்கும் பாஜக
வாக்கு சதவீதத்தை பார்த்தால் கடந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் 44.9 சதவீதம்பெற்றிருந்தத. ஆனால் இந்த முறை 42.1 சதவீதம் மட்டுமே பெறுமாம். ஆனால் பாஜக கடந்த மறை 10.2 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில் இந்த முறை 37.4 சதவீதம் வாக்குகள் பெறும் என்று கூறியுள்ளது.இடதுசாரிகள் கடந்த முறை 37.9 சதவீதம் பெற்ற நிலையில் இந்த முறை 13.0 சதவீதம் மட்டுமே பெறுவார்கள் என்று கூறியுள்ளது.

பாஜக செயல்பாடு
தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், மோடி, அமித்ஷாவின் பிரச்சாரங்கள் பெரிய அளவில் கைகொடுத்து எப்படியும் வெல்வோம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. ஜெயிப்பதற்காக புதிய வியூகங்களை பாஜக வகுத்து செயல்படுத்தி வருகிறது. பாஜக , டைம்ஸ் நவ் சர்வே படி 112 சீட் பெற்றால் அது மிகப்பெரிய திருப்பம் ஆகும். மம்தா பானர்ஜி பாஜகவின் வளர்ச்சியில் மிரண்டு போய் உள்ளார். ஐபேக் பிரசாந்த் கிஷோரின் ஐடியா படி அவர் பாஜகை வீழ்த்த போராடி வருகிறார். ஆனால் இந்த முறை நிச்சயம் மம்தாவிற்கு கடும் சவால் இருக்கும். பாஜக அபாராமாக செயல்பட போகிறது என்பது இந்த கணிப்பில் தெளிவாக தெரிகிறது.