For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணவு, குடிநீரின்றி கேரளத்தில் தமிழக ஜவுளி வியாபாரிகள், குழந்தைகள் சிக்கித் தவிப்பு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    வெள்ளத்தினால் உணவு இல்லை...பசியோடு உணவு கேட்கும் சிறுமி- வீடியோ

    திருவனந்தபுரம்: உணவு மற்றும் குடிநீரின்றி கேரளத்தில் தமிழக ஜவுளி வியாபாரிகள், குழந்தைகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    கேரளத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு கேரளத்தில் இத்தகைய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த கனமழையால் இடுக்கி, வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மொத்தம் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    நீர்நிலைகள் நிரம்பின

    நீர்நிலைகள் நிரம்பின

    இந்நிலையில் கேரளத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளும் அணைகளும் நிரம்பிவிட்டன. இதனால் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் கழித்து இத்தகைய மழை பெய்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து

    கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. முட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தேங்கிய தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    செங்கண்ணூரில் தண்ணீர் தேக்கம்

    செங்கண்ணூர் பகுதியில் கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் ஆறு போல் ஓடும் தண்ணீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ஜவுளி வியாபாரிகள்

    ஜவுளி வியாபாரிகள்

    கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டம் பேட்டை அங்காடி தபால்நிலைய மாடியில் கடந்த 2 நாட்களாக 70-க்கும் மேற்பட்ட தமிழக ஜவுளி வியாபாரிகள் மற்றும் மலையாளிகள், குழந்தைகள் உணவு, குடிநீரின்றி தவிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அரசு உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை எடுத்து அவர்களை மீட்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Heavy rain hits severe in Kerala, as a result of this Tamilnadu traders stranded in Kerala without food and water.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X