Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பா, மகன் என்றாலே ப.சி, கார்த்திதானா?: கேட்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ குடும்பங்களில் தந்தையும் மகனும் தலைவர்களாக இருக்கிறார்கள். சிதம்பரத்தை நான் எந்தவகையிலும் விமர்சனம் செய்யவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக டெல்லி சென்றுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு செய்தியாளர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பதில்கள்.

TNCC Chief Elangovan meets Cong General Secretary Wasnik amid controversy over his remarks

சென்னை வருகிறார்

கேள்வி: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்ததற்கான காரணம் என்ன?

பதில்: நான் எப்போது டெல்லி வந்தாலும் அவரை சந்திப்பது வழக்கம். அவர் விரைவில் தமிழகத்துக்கு வருகை தர இருக்கிறார். அனேகமாக 2 நாள் பயணமாக வருகிற 8ஆம்தேதியும், அதன்பிறகு 2 நாள் பயணமாக 21ஆம்தேதியும் அவர் சென்னை வருவார் என தெரிகிறது.

மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதற்காக சென்னையில் விரைவில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் முகுல் வாஸ்னிக் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக கூட்டம் மற்றும் அவருடைய சுற்றுப்பயணம் குறித்து திட்டமிடுவது தொடர்பாக அவரை நான் சந்தித்தேன்.

விளக்கம் கேட்கவில்லை

கேள்வி: ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தை சமீபத்தில் நீங்கள் விமர்சனம் செய்ததால் கட்சித்தலைமை அது குறித்த விளக்கத்தை உங்களிடம் கேட்டிருப்பதாகவும், அது தொடர்பாக நீங்கள் சோனியா காந்தியை சந்திக்க டெல்லி வந்திருப்பதாகவும் கூறப்படுவது உண்மையா?

பதில்: இது முற்றிலும் தவறான தகவல். அப்படி என்னிடம் விளக்கம் எதுவும் கேட்கப்படவில்லை. ப.சிதம்பரம் என் மீது கூறியதாக சொல்லப்படும் புகார்களுக்கு கட்சி தலைமைக்கு ஏற்கனவே தேவையான விளக்கம் அளித்து இருக்கிறேன். சோனியா காந்தி தொலைபேசியில் இதுகுறித்து கேட்டார். நான் அவருக்கு விளக்கம் அளித்திருக்கிறேன். அது மட்டுமல்ல. ஜெயந்தி நடராஜன் கட்சியை விட்டு விலகியது மட்டுமின்றி காங்கிரஸ் மேலிடத்தை குறை கூறியது போன்றவற்றுக்குத்தான் நான் பதில் கூறினேன்.

அப்பாவும் மகனும்

கேள்வி: தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒரு தலைவரும் அவருடைய மகனும் என்று கூறினால் மறைமுகமாக ப.சிதம்பரத்தை கூறுகிறீர்கள் என்றுதானே எடுத்துக் கொள்வார்கள்?

பதில்: தமிழக காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ குடும்பங்களில் தந்தையும் மகனும் தலைவர்களாக இருக்கிறார்கள். நானும் என் மகனும் இருக்கிறோம். முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் அவர் மகனும் இருக்கிறார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்பரசு மற்றும் அவருடைய மகன் காங்கிரசில் இருக்கிறார்கள். கோவை ராமசாமி காங்கிரசில் இருக்கிறார். அவருடைய மகனும் இருக்கிறார். சிதம்பரத்தை நான் எந்தவகையிலும் விமர்சனம் செய்யவில்லை.

கார்த்திக்கு நோட்டீஸ்

கேள்வி: கார்த்தி சிதம்பரத்துக்கு நீங்கள் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக உங்களுடைய இந்த டெல்லி வருகையின் போது தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டதா?

பதில்: கார்த்தி சிதம்பரம் பேசிய ஒரு கூட்டத்தில் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி இருக்கிறார். மேலிடத்தைக் குறை கூறி இருக்கிறார். அவை பற்றியெல்லாம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தேன். அந்த நோட்டீசுக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் என்பதால், அகில இந்திய காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டால்தான் தருவேன் என்று கூறி இருக்கிறார். அவர் தந்த பதிலை மேலிடத்துக்கு அனுப்பி இருக்கிறேன்.

முடிவுக்கு வந்துவிட்டதா?

கேள்வி: கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் தலைமைக்கு எழுதி இருக்கிறீர்களா?

பதில்: நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பது பற்றி உங்களிடம் சொல்ல முடியாது.

கேள்வி: கார்த்தி விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என்று கூறுகிறீர்களா?

பதில்: நான் அவருடைய பதிலை தலைமைக்கு அனுப்பி விட்டேன். அவர்கள் முடிவு எடுப்பார்கள்.

ராகுலை சந்திக்கவில்லை

ராகுல் காந்தியை சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை. அடுத்த வாரம் சென்னைக்கு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வரவுள்ளார். அது குறித்து மட்டுமே அவருடன் ஆலோசனை நடத்தினேன் என்று கூறி ஒருவழியாக பேட்டியை நிறைவு செய்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+