For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2016ல் இந்தியாவை கலக்கிய டாப் 10 நியூஸ் இவைதான்.. சொல்கிறது கூகுள் டிரெண்ட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: 2016ம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் எவை என்பதை கூகுள் வெளியிட்டுள்ளது.

அதிகமாக தேடப்பட்ட டாப் 10 செய்திகள் இவைதான்:

Top Google Search Trends In News For 2016

செய்தியிலும் முதலிடம் பிடிப்பது ரியோ 2016 ஒலிம்பிக்ஸ் என்ற வார்த்தைதான். இத்தொடரில் இந்தியா ஜொலிக்காவிட்டால் கூட, ஒலிம்பிக் ரிசல்டுகளை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர் என்பதற்கு இது சான்று.

இப்பட்டியலில் இரண்டாவது இடம் அமெரிக்க தேர்தலுக்கு. U.S. Elections என்ற வார்த்தை இடம் பெற்ற செய்திகளையே மக்கள் அதிகம் தேடியுள்ளனர்.

அதேபோல ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல தீர்மானித்த விவகாரம் குறித்து அறிய Brexit என்ற வார்த்தையை அதிகம் தேடியுள்ளனர். பட்டியலில் இதற்கு 3வது இடம்.

7th Pay Commission தொடர்பான செய்திக்கு இதில் 4வது இடம். டெல்லியில் நடந்த, Auto Expo 2016 ஆட்டோமொபைல் உற்பத்தி கண்காட்சி குறித்த செய்திக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

Oscars 2016 பற்றி அறிய முற்பட்டோர் எண்ணிக்கையால் இதற்கு 6வது இடம் கிடைத்துள்ளது. நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கி வரும், Demonetization பணமதிப்பிழப்பு குறித்த செய்தியை அறிய தேடியோர் எண்ணிக்கை அடிப்படையில் அதற்கு 7வது இடம்தான் கிடைத்துள்ளது. சமீபத்தில்தான் இதுகுறித்த தேடுதல் ஆரம்பித்தது என்பது காரணமாக இருக்கலாம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் இந்திய ராணுவம் நடத்திய Surgical strike தாக்குதல் குறித்த செய்தி 8வது இடத்தையும், உலகையே உலுக்கிய Zika virus நோய் குறித்த செய்தி 9வது இடத்தையும், BRICS Summit எனப்படும் உச்சிமாநாடு குறித்த செய்தி 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

English summary
Top Google Search Trends In News For 2016 was released by Google.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X