'திரிணாமுல் காங். எம்எல்ஏக்கள் 21 பேர் எங்களிடம் பேசிட்டு இருக்காங்க'.. பாஜக போட்ட புது குண்டு
கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏக்கள் எங்களிடம் தொடர்பில் இருப்பதாக பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளது மேற்கு வங்காளத்தில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இரு கட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி மேற்கு வங்காள அரசியல் வட்டாரத்தை அனல் பறக்க வைக்கின்றனர்.

6 மாதங்களில்
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை காட்டி எதிர்க்கட்சிகளை அசைத்து பார்க்க பாஜக முயற்சிப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இப்படி மேற்கு வங்காள அரசியல் களம் கொதித்து கொண்டிருக்கும் நிலையில், ''அடுத்த ஆறு மாதங்களில் புதிய உத்வேகத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உருவெடுக்கும்'' என்ற வாசகங்களுடன் பல இடங்களில் அக்கட்சியினர் நோட்டீஸ்களை ஒட்டி இருந்தனர்.

டிசம்பர் தான் இறுதிக்கெடு
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மேற்கு வங்காள எதிர்க்கட்சி தலைவரும் பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி, ''அமலாக்கத்துறையும் சிபிஐ அமைப்பும் தங்கள் பணிகளை செய்து வருகின்றன. அடுத்த ஆறு மாதங்கள் கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தாங்காது. டிசம்பர் மாதம் தான் இதற்கு இறுதிக்கெடு'' என்று கூறியிருந்தார்.

21 எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளனர்
இந்த நிலையில், மேற்கு வங்காள பாஜக தலைவர்களில் ஒருவரும் நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் அன்று சொன்ன அதே கருத்தை தான் இன்றும் வலியுறுத்துகிறேன். கொஞ்ச காலம் காத்திருங்கள்.. நடப்பது அனைத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள். 21 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜகவில் சேர்க்க சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' என்றார்.

முதல் முறையாக
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகராக திகழ்ந்த மிதுன் சக்கரவர்த்தி, பாஜக 77 இடங்களில் மட்டுமே பெற்று ஆட்சியை பிடிக்க தவறியதால் அதிகம் பொது வெளியில் தோன்றாமல் இருந்து வந்தார். தற்போது பல மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக மிதுன் சக்கரவர்த்தி தாக்கி பேசியிருக்கிறார்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
48 மணி நேரத்தில்.. மம்தாவுக்கு ஏற்பட்ட 5 அதிர்ச்சி.. திரும்பிய பக்கமெல்லாம் சிக்கல் மேல் சிக்கல்! -
4,000 EVM–கள் எரிந்தன.. 2026 மேற்கு வங்க தேர்தல் ரிசல்ட்டே அதுக்குள்ளத்தான்.. ஷாக் தந்த தீவிபத்து -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications