கண்ணில் கூலர்ஸ்.. புடவையோடு ஃபுட்பால்! மாஸ் காட்டிய மஹுவா மொய்த்ரா! என்ன அழகா ஃபுட்பால் ஆடுறாங்க!
கொல்கத்தா : அதிரடி பேச்சுகள் ஆவேச அரசியல் ட்விட்டரில் படு சூடான விவாதம் என அதிரடி அரசியல்வாதியாகவே பார்க்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹுவா மொய்த்ரா சேலை அணிந்து கால்பந்தாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா.
தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான இவர் அதிரடி பேச்சுகளுக்கும், தனது கருத்துக்களை யாருக்கும் அச்சமின்றி தைரியமாக தெரிவிப்பதற்கும் பெயர் போனவர்.

மஹுவா மொய்த்ரா
வழக்கமான அரசியல்வாதிகள் போல் இல்லாமல் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மஹுவா மொய்த்ராவுக்கு எப்போதுமே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக ட்விட்டரில் இவர் வெளியிடும் கருத்துக்கள் பலரையும் கவர்ந்திழுக்கும். நரேந்திர மோடி, ப.சிதம்பரம், உள்ளிட்டா பழுத்த அரசியல்வாதிகளை கூட ட்விட்டரில் சமரசமே இன்றி விமர்சித்து விடுவார்.

அதிரடி அரசியல்
சமூக வலைதளங்களிலேயே இப்படி என்றால் நாடாளுமன்றத்தில் கேட்கவா வேண்டும். எதிர்கட்சியாக இருந்தாலும் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் பேசும் பேச்சுகளுக்கும், உரைகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. நாடாளுமன்றத்தில் இவர் உரையாற்றுகிறார் என்றால் அன்றைய சமூக வலைதளங்களில் இவர் பேச்சு தான் முக்கிய டாபிக்காக இருக்கும். அந்த அளவுக்கு காரசார அரசியல் செய்யும் இவர், தற்போது சற்று ஓய்வெடுத்து ஃபுட்பால் விளையாண்டு இருக்கிறார்.

சேலை அணிந்து ஃபுட் பால்
அதுவும் பாரம்பரியமான சேலை அணிந்து கால்பந்தாட்டமாடும் மஹுவா மொய்த்ராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது சொந்த தொகுதியான கிருஷ்ணா நகர் தொகுதியில் நடைபெற்ற கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். முன்னதாக வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்த மகுவா உற்சாகமாகி தானும் கால் பந்து மைதானத்தில் களமிறங்கி விளையாடினார்.

ட்விட்டரில் வரவேற்பு
தற்போது அந்த புகைப்படங்களை மஹுவா ட்விட்டரில் வெளியிட பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக புடவை அணிந்து அவர் புட்பால் விளையாடியது தான் ஹைலைட் என்கின்றனர் நெட்டிசன்கள். கண்ணை கவரும் புடவையில் கட் ஷு மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து கால்பந்தாடும் மஹுவா மொய்த்ராவின் புகைப்படங்கள் மாஸாக உள்ளன என புகழ்ந்த தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள். தற்போது வரை இந்த பதிவை சுமார் 20,000 பேர் லைக் செய்துள்ளதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீட்வீட் மற்றும் கமண்ட் செய்துள்ளனர்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications