கர்நாடகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதி விபத்து... 9 விவசாயிகள் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் 9 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. வயல் வேலை முடித்துவிட்டு நெடுஞ்சாலையில் விவசாயிகள் மாட்டு வண்டியில் வந்துள்ளனர்.

Truck accident in Karnataka kills 9 farmers

அப்போது எதிரில் லாரி ஒன்று மிகவும் வேகமாக வந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி மாட்டுவண்டி மீது மோதியது.

இதில் 9 விவசாயிகளும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்கள். காயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Truck accident in Karnataka kills 9 farmers. Some people injured severely, had taken to hospital.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற