எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு: ஆகஸ்ட் 9-க்கு ஒத்தி வைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய கோரும் வழக்கின் சட்ட உதவிகள் வழங்க கால அவகாசம் கோரியதை தொடர்ந்து விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

Trust vote case postponed to August 9

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வைக்கப்பட்ட வேண்டுகோளை பேரவைத் தலைவர் நிராகரித்திருக்க கூடாது என்ற அடிப்படையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு வழியாக புதிய நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் பாண்டியராஜன் கோரியிருந்தார்.

இந்த வழக்கின் மீது கடந்த வாரம் விசாரணை நடந்த போது நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து ஜூலை 11-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தன்னால் சட்ட ஆலோசனைகள் வழங்க முடியாது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் கூறினார்.

Governor Report On Tamilnadu Assembly to President

இந்நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியலமைப்பு சட்டத்தின், 212-ஆவது பிரிவின் கீழ், சட்டசபை தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார்.

மேலும் இந்த வழக்கில் அவர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Trust vote case: SC postpones hearing to Aug 9 as the centre's lawyer seeks some more time to give advice.
Please Wait while comments are loading...