துருக்கியில் ரஷ்யா விமானம் வீழ்த்தப்பட்ட உடன் 3வது உலகப் போரை "பிரகடனம்" செய்த 'ட்விட்டர்'வாசிகள்!
டெல்லி: துருக்கியில் ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதுதான் தாமதம்... ட்விட்டர்வாசிகள் உடனடியாக 3வது உலகப் போரை பிரகடனம் செய்துவிட்டனர். ட்விட்டரில் நேற்று முதல் #WorldWarIII, #WorldWar3 ஆகிய ஹேஸ்டாக்குகள் படுபயங்கரமான ட்ரெண்டிங்காக இருக்கின்றன.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ரஷ்யா மிகப் பெரும் விலைகளை கொடுத்து வருகிறது. 224 பேருடன் பயணித்த ரஷ்யா விமானம் எகிப்தின் ஷினாய் தீபகற்பம் அருகே வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துருக்கியால் ரஷ்யாவின் போர் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
|
3வது உலகப் போர்?
துருக்கியால் ரஷ்யாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உடனே ஊடகங்களும் சமூக வலைதளங்களும் 3வது உலகப் போர் மூள்கிறதா? என அலசி ஆராய்ந்து வருகின்றன. ரஷ்யா உடனடியாக துருக்கிக்கு எதிராக தாக்குதலை நடத்திவிடாது; ஏற்கனவே உக்ரைன் விவகாரத்தில் அது தனிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறது என்றெல்லாம் காரணங்கள் அடுக்கப்படுகின்றன.
|
முதல் உலகப் போரைப் போல
அதே நேரத்தில் முதலாவது உலகப் போரில் பால்கன் நாடுகளில் தற்போதைய சிரியாவைப் போல உலகின் அத்தனை நாடுகளும் முகாமிட்டிருந்தன.. பின்னர்தான் உலகப் போரே வெடித்தது எனவும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
|
ட்விட்டர்வாசிகள் பிரகடனம்
இதற்கு அப்பால் ட்விட்டர்வாசிகளோ மூன்றாவது உலகப் போரை பிரகடனமே செய்துவிட்டனர். ஆம் #WorldWarIII, #WorldWar3 ஆகிய பெயர்களில் ஹேஸ்டாக்குகள் நேற்று முதல் செம டிரெண்டிங்காக போய்க் கொண்டிருக்கிறது.
|
காரசார பதிவுகள்
#WorldWarIII, #WorldWar3 ஆகிய ஹேஸ்டாக்குகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டாலும் நேற்று முதல் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஹேஸ்டாக்கில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நவம்பர் 6-ந் தேதி பாரீஸ் தாக்குதலின் போதும் கூட இதே ஹேஸ்டாக்கில் கருத்துகள் பகிரப்பட்டன.
ஆனால் அதை விட 3வது உலகப் போர் மூண்டுவிட்டதாகவே கருதி கருத்துகளை காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர்.

ஜோக்குகள்
அதேபோல் #WorldWarIII, #WorldWar3 ஹேஸ்டாக்குகளில் 3வது உலகப் போர் குறித்த ஏகப்பட்ட ஜோக்குகளும் ஏராளமாக பதியப்பட்டு வருகின்றன. குறிப்பாக 3வது உலகப் போர் தற்போது நடைபெறும் போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்; நான் என்ன செய்யப் போகிறேன் என்பது போன்ற ஜோக்குகள் கொடிகட்டிப் பறக்கின்றன.
போரை அனுபவிச்சுவங்களுக்குத்தான் வலி தெரியுமப்பா...
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications