For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன்களால் பலாத்காரங்கள் அதிகரிக்குதா.. டிவிட்டரில் 'கருத்துத் தீ'யை பற்ற வைத்த மக்கள்!!

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பலாத்காரங்களை தவிர்க்க பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்த அறிக்கையை கிண்டல் அடித்து ட்விட்டரில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான சட்டசபை குழு தலைவர் சகுந்தலா ஷெட்டி எம்.எல்.ஏ. அம்மாநில சட்டசபையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். பெண்கள் கடத்தப்படுவது மற்றும் கற்பழிப்படும் சம்பவங்களுக்கு செல்போன் காரணமாக உள்ளது. கலந்துரையாடலில் நாங்கள் இதை கண்டறிந்தோம். எனவே, பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பலரும் ட்விட்டரில் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்போன்கள்

செல்போன்கள்

செல்போன் வருவதற்கு முன்பு பாலியல் பலாத்காரங்களே நடக்கவில்லை என்பதை கர்நாடக எம்.எல்.ஏ. நிரூபிக்க வேண்டும். இதை கேட்டு கழுதைகளுக்கு கூட உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஹேமந்த் குமார் தேசாய் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னேறிய நாடு

செல்போன்களால் தான் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன என்று அறிக்கை சமர்பித்துள்ளனர். நாம் முன்னேறிய நாடு என்று அறிவிக்கப்பட இது போன்று மேலும் பல அறிக்கைக
ள் சமர்பிக்கப்பட வேண்டும் என நிகில் தெரிவித்துள்ளார்.

ஆணுறை

ஆணுறைகளால் செக்ஸ் நடக்கிறது. செல்போன்களால் பலாத்காரங்கள் நடக்கிறதாம், என்ன ஒரு லாஜிக் என்று பிர்லோசா ட்வீட் செய்துள்ளார்.

காப் பஞ்சாயத்து

பலாத்காரம் செய்பவர்கள் செய்வார்கள். செல்போன்கள் செய்யாது. பலாத்காரங்கள் அதிகரிக்க செல்போன்கள் தான் காரணம் என்று கூறி கர்நாடக எம்.எல்.ஏ. காப் பஞ்சாயத்து ஆள் போன்று நடந்து கொள்கிறார் என கவிதா கிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நிர்பயா

செல்போன், சவ்மெய்ன், டிவி, பேப்பர், பென்சில் எல்லாம் பலாத்காரத்திற்கு காரணம் என்று குறைகூறுங்கள். ஆனால் நிர்பயா வழக்கில் அந்த மைனருக்கு தண்டனை மட்டும் வழங்கமாட்டீர்கள் என ஷிவாங்கி முத்து தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.

செல்போன்களால் பாலியல் பலாத்காரங்கள் ஏற்படுவதாக கர்நாடக எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். அம்மா பெண்ணே நீங்களும் பல ஆண்டுகளாக செல்போன் பயன்படுத்துகிறீர்கள். அது உங்களை பாதுகாப்பாக வைத்துள்ளது. ச்சே.. என்று வைபவ் குப்தா தெரிவித்துள்ளார்.

English summary
People are making fun of Karnataka legislative assembly's recommendation to ban cell phones in schools and colleges to avert rapes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X