வலுக்கும் டிவிட்டர் சண்டை.. யோகியை கலாய்த்து வீடியோ வெளியிட்டது காங்கிரஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையில் டிவிட்டரில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கும் இடையில் சண்டை நடந்து வருகிறது.

கர்நாடகாவில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்த சண்டை நடந்து வருகிறது. ஏற்கனவே கர்நாடக சென்று இருக்கும் யோகி, சித்தராமையாவுடன் சண்டையிட்டார்.

தற்போது காங்கிரஸ் கட்சி யோகியை கலாய்த்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாங்க வாங்க

யோகி கர்நாடக வந்தவுடன் சித்தராமையா டிவிட் ஒன்று செய்தார். அதில் ''உபி முதல்வர் யோகியை எங்கள் மாநிலத்திற்கு வரவேற்கிறேன். எங்களிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது. எங்கள் இந்திரா கேண்டீனையும், ரேஷன் கடையையும் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் மாநிலத்தில் பசியால் நடக்கும் மரணங்கள் குறையும்'' என்று குறிப்பிட்டார்.

என்ன பதில்

இதற்கு பதிலளித்த யோகி ''அழைப்பிற்கு நன்றி. உங்கள் மாநிலத்தில் நிறைய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக கேள்விப்பட்டேன்.மேலும் இதனால் நல்ல அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாகவும் கேள்விப்பட்டேன். உங்கள் கூட்டணியால் நடந்த கேடுகளை உபி முதல்வராக நான் மாற்றிக் காட்டுவேன்'' என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் வீடியோ

காங்கிரஸ் தற்போது சண்டையை முடிக்காமல் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறது. ''இதோ பிஜேபியின் நட்சத்திர பிரச்சாரக்காரரை செய்வதன் ரெசிபி. இதை நாங்கள் யாருக்கும் பரிந்துரைக்கவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளது. அந்த வீடியோவில் யோகி செய்த தவறுகளை எல்லாம் காமெடியாக குறிப்பிட்டு அவரை எப்படி தயாரிக்க வேண்டும் என்று விளக்கி இருக்கிறார்கள்.

பிரச்சனை

பிரச்சனை

இந்த வீடியோவால் தற்போது மீண்டும் பிரச்சனை உருவாகி இருக்கிறது. இந்த வீடியோவிற்கு பாஜக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு மாநில முதல்வரை பற்றி இப்படி காமெடி செய்வது தவறு என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Few days ago Siddaramaiah‏ tweeted ''I welcome UP CM Shri @myogiadityanath to our state. There is a lot you can learn from us Sir. When you are here please visit a Indira Canteen & a ration shop. It will help you address the starvation deaths sometimes reported from your state. #YogiInBengaluru'' to Yogi. Yogi replied him '' Thank you for the welcome @siddaramaiah ji. I heard number of farmers committing suicide in Karnataka was highest in your regime, not to mention the numerous deaths and transfer of honest officers. As UP CM I am working to undo the misery and lawlessness unleashed by your allies.''. Now congress published a video with a topic of ''Here's a recipe for a BJP star campaigner. We don't recommend it.'' about Yogi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற