For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதல் திருமணமா?: பெண் பெயரில் ரூ.50,000 டெபாசிட்- உ.பி போலீஸ் நிபந்தனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில், பெற்றோர் அனுமதியில்லாமல், திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிக்கு, போலீசாரே திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால், பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஆண், மணப்பெண்ணின் வங்கிக் கணக்கில், 50 ஆயிரம் ரூபாய், 'டெபாசிட்' செய்ய வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதிக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில் காதல் திருமணங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, போலீசாரும் ஆதரவாக உள்ளனர்.

மாநில, டி.ஜி.பி., தேவ்ராஜ் நாகர், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சில நாட்களுக்கு முன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும், காதல் ஜோடிகளை தடுக்க வேண்டாம். மாறாக, அந்தப் பெண்ணின், வங்கிக்கணக்கில், 50 ஆயிரம் ரூபாயை, டெபாசிட் செய்ய மட்டும் நிபந்தனை விதியுங்கள்' என, தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒரு காரணமும் உண்டு.சமீபத்தில், பெற்றோருக்கு தெரியாமல், ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி, திருமணமான, சில நாட்களிலேயே பிரிந்து விட்டது.

பெண்ணை தவிக்கவிட்டு போன கணவன், எங்கிருக்கிறான் என்பதே தெரியவில்லை.இது போன்ற சூழ்நிலையில், அந்தப் பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், காதல் திருமணத்திற்கு, '50 ஆயிரம் ரூபாய் நிபந்தனை' விதிக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
Uttar Pradesh, it seems, is no place for a poor lover. No offence meant, but love in UP comes at a cost of Rs.50,000.And that has happened after the court found itself a role even in courtship, thanks to the age of judicial activism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X