உ.பி.யில் ரோந்து வாகனத்தில் ஹாயாக தூங்கிய 2 போலீஸ்: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: கிரேட்டர் நொய்டாவில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் இன்னும் சிக்காத நிலையில் உத்தர பிரதேச மாநில போலீஸ் அதிகாரிகள் இருவர் ரோந்து வாகனத்தில் தூங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 35 வயது பெண் ஒருவர் யதார்த் கட்டிடம் அருகே சாலையோரம் கிடந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

UP: Policemen caught sleeping in PCR van

போலீசார் வந்து விசாரித்தபோது தன்னை 3 பேர் காரில் வைத்து பலாத்காரம் செய்து இங்கே தள்ளிவிட்டுச் சென்றதாக அந்த பெண் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் இதுவரை எப்.ஐ.ஆர். போடவில்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அருகே போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் ரோந்து வாகனத்தில் ஹாயாக தூங்கிக் கொண்டிருந்ததை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே உத்தர பிரதேச போலீசார் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two police officials were seen taking a nap in PCR van in Uttar Pradesh four hours after greater Noida gang-rape.
Please Wait while comments are loading...