For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யில் பாஜக 50 இடங்களைக் கைப்பற்றும்; சமாஜ்வாடி- பகுஜன் இடையே கடும் போட்டி!!

By Mathi
|

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா 50 இடங்களைக் கைப்பற்றுமாம். இம்மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கடும் போட்டி இருக்கும் என்கிறது சி.என்.என்.- ஐ.பி.என். கருத்து கணிப்பு.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு சி.என்.என்.-ஐ.பி.என்.- லோக்நிதி- சிடிஎஸ் இணைந்து கருத்து கணிப்புகளை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 50 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்/

இந்த மாநிலத்தில் 2வது இடத்துக்கு சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கடும் போட்டி இருக்குமாம்.

பாஜகவுக்கு 42-50

பாஜகவுக்கு 42-50

உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 42 முதல் 50 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றுமாம். மொத்தம் 36% வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்குமாம்.

சமாஜ்வாடிக்கு 11-17

சமாஜ்வாடிக்கு 11-17

சமாஜ்வாடி கட்சிக்கு 11 முதல் 17 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம். இந்த கட்சிக்கு 22% வாக்குகள் கிடைக்குமாம்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10-16

பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10-16

பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 முதல் 16 இடங்கள் கிடைக்குமாம். 18% வாக்குகள் இந்த கட்சிக்கு கிடைக்குமாம்.

காங்கிரஸுக்கு?

காங்கிரஸுக்கு?

காங்கிரஸ் கட்சிக்கு இம்மாநிலத்தில் 4 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்குமாம். ஒரு காலத்தில் உ.பி.யில் கோலோச்சிய கட்சி காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மிக்கு..

ஆம் ஆத்மிக்கு..

இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அவர் உட்பட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் எவருமே ஜெயிக்க வாய்ப்பில்லையாம்.

பிரியும் இஸ்லாமியர் வாக்குகள்..

பிரியும் இஸ்லாமியர் வாக்குகள்..

இந்த மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வாக்குகள் சமாஜ்வாடிக்கு 34%. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 23%, காங்கிரஸ் கட்சிக்கு 21% என பிரியுமாம். இதனாலேயே பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கிறது,

மோடி, ராகுல், மாயாவதி

மோடி, ராகுல், மாயாவதி

உ.பி.யில் யார் பிரதமராக வேண்டும் என்பதில் மோடிக்கு 34%, ராகுலுக்கு 12%, மாயாவதிக்கு 11%, முலாயமுக்கு 10% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
In Uttar Pradesh, the biggest state in terms of Lok Sabha seats, the BJP is all set to decimate its opponents with the Narendra Modi wave sweeping the state. The party is projected to get 42-50 Lok Sabha seats in the key battleground state according to CNN-IBN-Lokniti-CSDS national election tracker and seat projections by Chennai Mathematical Institute Director Rajeeva Karandikar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X