என் சரோட் கிடைத்துவிட்டது, என் உயிர் கிடைத்துவிட்டது: உஸ்தாத் அம்ஜத் அலி கான்
டெல்லி: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டனில் இருந்து டெல்லி வந்தபோது மாயமான உஸ்தாத் அம்ஜத் அலி கானின் சரோட் இசைக்கருவி கிடைத்துள்ளது.
பிரபல சரோட் இசைக்கலைஞரான உஸ்தாத் அம்ஜத் அலி கான் ரவிந்திரநாத் தாகூரின் வாழ்வை கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனது மனைவி சுபலக்ஷ்மியுடன் லண்டன் சென்றார். கடந்த 21ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அவர் கடந்த 28ம் தேதி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டனில் இருந்து டெல்லி திரும்பினார்.
முதல் வகுப்பில் பயணம் செய்த அவர் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவரது சரோட் இசைக்கருவியை காணவில்லை. பயணிகளின் உடைமைகள் வந்தபோதிலும் அவருடைய சரோட் மற்றும் வரவில்லை. 4 முதல் 5 மணிநேரம் காத்திருந்தும் சரோடை காணவில்லை.

கடந்த 45 ஆண்டுகளாக தான் பயன்படுத்திய சரோட் கிடைக்க வேண்டும் என்றும், தனக்கு இழப்பீடு தேவையில்லை என்றும் அம்ஜத் அலி கான் தெரிவித்திருந்தார். லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தின் 5வது முணையத்தில் உள்ள பேக்கேஜ் சிஸ்டத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகளின் உடைமைகளை அவரவரிடம் சேர்க்க 24 மணிநேரமும் பணியாற்றுவதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்திருந்தது.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Epic Reunion!!! BA delivers my Sarod. Thank you all for your prayers and love, especially the media for their... <a href="http://t.co/MjYbLHYBZw">http://t.co/MjYbLHYBZw</a></p>— Amjad Ali Khan (@AAKSarod) <a href="https://twitter.com/AAKSarod/statuses/483864905494573056">July 1, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் அம்ஜத் அலி கானின் சரோடை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துள்ளது.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பிரிட்டிஷ் ஏர்வேஸ் என் சரோடை கண்டுபிடித்து என்னிடம் கொடுத்துவிட்டது. உங்களின் பிரார்த்தனை மற்றும் அன்புக்கு நன்றி. குறிப்பாக மீடியாவின் அன்பான ஆதரவுக்கு நன்றி. என் உயிர் கிடைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications