உ.பி. சட்டசபையில் கடுமையான அமளிக்கிடையே குறட்டைவிட்டு தூங்கிய எம்.எல்.ஏ.க்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபையில் ஜிஎஸ்டி கூட்டத்தின் போது கடுமைாயன அமளி ஏற்பட்டது. அப்போதுஎம்.எல்.ஏ.க்கள் குறட்டைவிட்டு தூங்கும் வீடியோவானது வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக்கொண்டார். பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நேற்று சட்டசபை தொடரின் முதல் கூட்டம் தொடங்கியது. முதல் கூட்டு கூட்டத்தில் கவர்னர் ராம்நாயக் உரையாற்றினார்.

Uttar Pradesh MLAs caught sleeping in Lucknow's Lok Bhawan

சட்டசபை நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டன.

அப்போது ஆளுநர் ராம்நாயக்கின் மீது காகித பந்துகளும் வீசப்பட்டன. இதனிடையே சட்டசபையில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் பலர் குறட்டைவிட்டு தூங்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது. முதல் கூட்டமே குறட்டையிலா என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Uttar Pradesh MLAs caught sleeping during GST meeting in Lucknow's Lok Bhawan
Please Wait while comments are loading...