வாரணாசியில் மோடி.. அமோக வரவேற்பு! காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அமித்ஷா, ஆதித்யநாத்துடன் சிறப்பு வழிபாடு

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: லோக்சபா பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பிறகு, தனது தொகுதியான வாரணாசிக்கு இன்று வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மீண்டும், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Varanasi: Narendra Modi offers prayers at the Kashi Vishwanath temple

இதையடுத்து, வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, இன்று மோடி வாரணாசி வருகை தந்தார். காலை 10 மணி அளவில் வாரணாசி விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு, காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றார். அவருடன் பாஜக தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கோவிலுக்கு உடன் சென்றனர்.

கோவிலில் சுமார் 20 நிமிடங்கள் சிவனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பிரதமர் மோடி பங்கெடுத்தார். முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து கோவிலுக்கு அவர் காரில் வருகை தந்த போது, சாலையின் இரு மருங்கிலும் கூடிநின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாஜகவையும், மோடியையும் வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

அவர்களை நோக்கிக் கையசைத்தபடி வருகை தந்தார் மோடி. தன்னை மீண்டும் லோக்சபாவிற்கு தேர்ந்தெடுத்த வாரணாசி மக்களுக்கு மோடி இன்று நன்றி தெரிவிக்கும் வகையில், பிரமாண்ட ரோட்ஷோவுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வாரணாசி விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+