For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய் மல்லையா உள்பட 63 பேரின் ரூ.7,000 கோடி கடன் ரத்து இல்லை… அருண் ஜேட்லி விளக்கம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா உள்ளிட்ட 63 பேரின் ரூ.7,016 கோடி மதிப்பிலான வாராக்கடன் ரத்து இல்லை என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

தவிர்க்க முடியாத சூழலில் இந்த கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாகவும், இவை அனைத்தும் வங்கியின் வசூலிக்கப்பட்ட கடன்களாகக் கருதப்படுவதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. தாங்கள் வாங்கிய பல கோடி ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்க மனமில்லாத மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவு செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

Vijay Mallya loan not waived off: Arun Jaitley

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'ஸ்டேட் வங்கி தனது வாராக் கடன் குறித்த தகவல்களை புத்தகப் பதிவில் செயல்படாத சொத்து என்ற பெயரில்

என்று பட்டியலிட்டுள்ளது. அவற்றை தள்ளுபடி செய்வதாக குறிப்பிடவில்லை. ஒரு தொழில்நுட்ப வார்த்தையை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குளறுபடி தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என அவர் கூறியுள்ளார். மேலும், விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அவருடைய கடன் எப்படி தள்ளுபடி செய்யப்படும் என அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார். அந்தக் கடன்களை மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

English summary
Vijay Mallya loan not waived off, says finance minister Arun Jaitley
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X