பாஜக வேட்பாளரான தனது அம்மாவுக்கு எதிராக வாக்களித்த மகன்: வைரலாகும் பேஸ்புக் போஸ்ட்
ஆலப்புழா: கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவரின் மகன் அவருக்கு எதிராக வாக்களித்தது குறித்து ஃபேஸ்புக்கில் தெரிவித்தது வைரலாகி உள்ளது.
கேரளாவில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரி முன்னணி அமோக வெற்றி பெற்றது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்தது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் பஞ்சாயத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜகதம்மா வெறும் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
சிபிஐ வேட்பாளர் 359 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜகதம்மா 353 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் அவரது மகனும், போலீஸ் கான்ஸ்டபிளுமான ராஜேஷ் குமார் ஃபேஸ்புக்கில் மலையாளத்தில் கூறியிருப்பதாவது,

பாஜக வேட்பாளர்
தாமரைக்குளம் பஞ்சாயத்தின் 6வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட என் தாய் தோல்வி அடைந்துள்ளார். அரசு ஊழியரான அவரது மகன் அவருக்கு எதிராக தபால் மூலம் வாக்களித்ததும் அவரது தோல்விக்கு ஒரு காரணம் ஆகும். இதை நான் மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன். நான் நாட்டின் 126 கோடி மக்களை நினைத்து கவலைப்படுகிறேன்.

குஜராத்
மோடியின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு துவக்கக் கல்வியில் குஜராத் 28வது இடத்தில் இருந்தது. பெரும்பாலான குஜராத் மக்கள் திறந்த வெளியில் தான் இயற்கை உபாதைகளை கழிக்கிறார்கள். குஜராத்தில் தூய்மையான நகரங்களே இல்லை.

இடஒதுக்கீடு
இடஒதுக்கீடு முறை ரத்து செய்யப்படும் என்று மோகன் பகவத் மேல் சாதியினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதே சமயம் மோடியோ தாழ்த்தப்பட்டவர்களிடம் இடஒதுக்கீடு முறை தொடரும் என்று கூறியுள்ளார்.

தாய் அன்பு
என் தாய் மீது உள்ள அன்பு நாட்டுக்காக என் கடமையை செய்யவிடாமல் தடுக்காமல் இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். நான் படித்த பள்ளியில் என் தாய் ஆசிரியையாக இருந்தார். எனக்கு கற்றுக் கொடுத்த தேசிய உறுதிமொழியை அவர் மறந்துவிட்டார். இதனால் என் தாயைப் போன்று உறுதிமொழியை மறந்தவர்களுக்காக இதை போஸ்ட் செய்ய முடிவு செய்தேன்.

போராட்டம்
அடுத்த தலைமுறையினருக்காக நான் போராட வேண்டியுள்ளது. மேம்பட்ட சிந்தனை, ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்றவற்றை மத தீவிரவாதத்திடம் இருந்து காக்க நாம் பல தியாகங்கள் செய்ய வேண்டும் என்று ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவரது போஸ்டை பார்த்து பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications