For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய படை தயார் நிலையில் இருக்கு வேண்டும்.. வடமாநில கலவரத்தால் ராஜ்நாத் சிங் உத்தரவு

வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தலித் போராட்டம் கலவரத்தில் முடிந்த காரணத்தால் இந்தியா முழுக்க மத்திய படை தயார்நிலையில் இருக்கு வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தீவிரமடையும் தலித் மக்களின் போராட்டத்தால் வட மாநிலங்களில் பதற்றம்

    டெல்லி: வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தலித் போராட்டம் கலவரத்தில் முடிந்த காரணத்தால் இந்தியா முழுக்க மத்திய படை தயார்நிலையில் இருக்கு வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது. அப்படியே கைது செய்ய வேண்டும் என்றால் அதிக கிரேட் கொண்ட அதிகாரிகள் கொடுக்கும் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்ய முடியும் என்று கூறியது.

    We are ready to provide assistance to any state says Rajnath Singh on Dalit protest

    இதற்கு எதிராக இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று கலவரமாக மாறியது.

    ராஜஸ்தான், டெல்லி, குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்த போராட்டம் பரவியது. இதுவரை மொத்தமாக இதில் 7 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

    இதனால் தலித் மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன்படி ''அனைத்து மாநிலங்களும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும்.வன்முறையை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். இப்போது கொஞ்சம் போராட்டம் கட்டுக்குள் வந்துள்ளது'' என்றுள்ளார்.

    மேலும் ''மாநிலங்களில் பொது அமைதியை பாதுகாக்க வேண்டும். இந்தியா முழுக்க மத்திய ரிசர்வ் படை தயாரி நிலையில் இருக்க வேண்டும். அனைத்து கட்சிகளும் இதில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றுள்ளார்.

    English summary
    Dalits are doing protest in North India against Supreme Court changes in automatic arrests and registration of criminal cases under the SC/ST Act. We are ready to provide assistance to any state that may require so says Rajnath Singh on Dalit protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X