மேற்கு வங்கத்தில் திதீக்கு தீ வெற்றி... ஹாட்ரிக் முதல்வராகும் மமதா பானர்ஜி - விடாமல் விரட்டும் பாஜக
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திதீ மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீயாய் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அரியணையில் அமரப்போகிறார் என்று என்று ஏபிபி சி வோட்டர், டைம்ஸ் நவ் சி வோட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. ரிபப்ளிக் டிவி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு மட்டும் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Recommended Video
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி உள்ளது. ஆட்சியை பிடிக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
கம்யூனிஸ்ட்களின் கைகளில் இருந்த மேற்கு வங்கத்தை 2011ஆம் ஆண்டு கைப்பற்றினால் மமதா பானர்ஜி. 2016ஆம் ஆண்டும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல்வரானார். இந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க பல வியூகங்களை அமைத்து பிரசாரம் செய்துள்ளார் மமதா பானர்ஜி.

பல ஆண்டு கனவு
முதல்முறையாக ஆட்சியை பிடித்து அரியணை ஏற வேண்டும் என்று பாஜக தீவிரமாக களம் இறங்கி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தலைவர்கள் ஆடுபுலி ஆட்டத்தைத் தொடங்கி விட்டனர்.

முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள்
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்பில் மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி அமைப்பார் என்று பல நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மமதா கைகளில் மீண்டும் மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 148 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம்.
மமதா பானர்ஜி மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டிஎம்சி வெற்றி வாய்ப்பு
ETG ரிசர்ச் எக்ஸிட் போல் முடிவுகளில் டிஎம்சி 164 -176, பாஜக 105 - 115, காங்கிரஸ் 10-15 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. P- MARQ எக்ஸிட் போல் முடிவுகளின் படி டிஎம்சி 152 - 172, பாஜக 112 -132, காங்கிரஸ் இடதுசாரி கூட்டணி கட்சிகள் 10 -20 இடங்களில் வெல்லும் என தெரிவித்துள்ளது.

பரிதாப நிலையில் காங்கிரஸ் கூட்டணி
ஏபிபி சி - சி வோட்டர் நிறுவனம் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் டிஎம்சி 152 -164, பாஜக 109 -121, காங்கிரஸ் கூட்டணி 14-25 இடங்களில் வெல்லும் என தெரிவித்துள்ளது. சிஎன்என் நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில் டிஎம்சி 162, பாஜக 115, காங்கிரஸ் இடதுசாரி கூட்டணி 15 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

ஹாட்ரிக் வெற்றி
டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 158 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் பாஜகவிற்கு 115 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு மொத்தம் 19 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.

பாஜக கைகளில் ஆட்சி
ரிபப்ளிக் டிவி சிஎன்எக்ஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. டிஎம்சி 128 -138, பாஜக 138 -148 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 11 -21 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

வியூகம் வெற்றி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் மம்தா பானர்ஜிக்கு பிரசாந்த் கிஷோர் வகுத்த வியூகம் வெற்றிப்பாதையை காட்டியுள்ளது. அதே நேரத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி 211 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. இந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கடுமையாக மோதி ஆட்சியை தக்க வைப்பார் என்பது தெரியவந்துள்ளது.

மக்கள் தீர்ப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் மே 2ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்குமா? மக்கள் என்ன தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்!












Click it and Unblock the Notifications