மேற்கு வங்க தேர்தல் வன்முறை.. ஆளும் திரிணாமுல் கட்சிக்கு செக்? 11 புதிய எஃப்ஐஆர்களை பதிவுசெய்த சிபிஐ
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக சிபிஐ புதிதாக 11 எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ தரப்பில் இதுவரை 21 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்குக் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
அதேநேரம் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. கொரோனா காலகட்டத்தில் இப்படி எட்டு கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேற்கு வங்க தேர்தல்
இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் என அனைத்து முக்கிய அமைச்சர்களும் மேற்கு வங்கத்திலேயே முகாமிட்டனர். ஆனால், பாஜகவால் வெல்ல முடியவில்லை, தொடர்ந்து 3ஆவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்றார்.

சிபிஐ விசாரணை
இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெலியான மே 2ஆம் தேதி மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய அளவில் அரசியல் வன்முறை ஏற்பட்டது. கொலை,, கொள்ளை என வன்முறை சில நாட்கள் வரை தொடர்ந்தது. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், வன்முறையின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

11 புதிய எஃப்ஐஆர்கள்
இது குறித்து விசாரிக்க சிபிஐ இணை இயக்குநர்கள் ராம்நிஷ், அனுராக், வினீத் விநாயக் மற்றும் சம்பத் மீனா தலைமையில் நான்கு குழுக்களும் அமைக்கப்பட்டன. அதன் பின்னரே வழக்கு விசாரணை வேகமெடுத்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வன்முறை தொடர்பாக 10 எஃப்ஐஆர்களை சிபிஐ பதிவு செய்திருந்தது. செய்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மேலும் 11 எஃப்ஐஆர்களை சிபிஐ தற்போது பதிவு செய்துள்ளது.

வேகமெடுக்கும் விசாரணை
இதன் மூலம் இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும், மே 14ஆம் தேதி மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் கொலை கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் இரண்டு பேரை போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தையும் சிபிஐ பதிவு செய்யத் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நந்திகிராம் தொகுதி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை அடைந்த போதிலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மம்தாவுக்கு எதிராக போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications