For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

50 கோடி பேருக்கு பலன் தரும் அரசு காப்பீடு திட்டம் 'ஆயுஷ்மான் பாரத்' என்றால் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிவைத்த ஆரோக்கிய காப்பீடு திட்டத்தின் பெயர் 'ஆயுஷ்மான் பாரத்'.

இது ஒரு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம். நாடு முழுக்க ஏழை, எளிய 10 கோடி குடும்பங்களுக்கு (ஏறத்தாழ 50 கோடி பலனாளிகள்) ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரையில் மருத்துவமனை செலவீனங்களை ஏற்கும் திட்டம் இதுவாகும்.

What is Ayushman Bharat?

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • ஆயுஷ்மான் பாரத்- ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான ஆரோக்கிய காப்பீடு திட்டம்.
  • இதயம், கிட்னி, கல்லீரல் பிரச்சினைகள் உட்பட 1300 வகை நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.
  • சமீபத்திய சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு படி, 8.03 கோடி ஊரக குடும்பங்கள், 2.33 கோடி நகர்ப்புற குடும்பங்கள் இந்த காப்பீடுக்கு தகுதி படைத்தவர்கள்.
What is Ayushman Bharat?
  • குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, வயது, பாலினம் குறித்த எந்த தடையும் இந்த திட்டத்தில் இல்லை.
  • குடும்பத்திலுள்ள தகுதி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்குமே திட்டத்தின் பலன் கிடைக்கும்.
  • உடல் நலக்குறைவால் ஒருவேளை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர வேண்டி வந்தால் பணம் செலுத்த தேவையில்லை.
What is Ayushman Bharat?
    • மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும் முன்பாக நோய் ஆரம்பித்த காலம் முதல், வீடு திரும்பிய பிறகு வரையிலான செலவுகள் காப்பீட்டில் அடங்கும்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை தேவை. ஆதார் கட்டாயம் கிடையாது
    • நாடு முழுக்க உள்ள அரசு மற்றும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் இந்த காப்பீடு செல்லுபடியாகும்.
    What is Ayushman Bharat?
    • மாநில ஆரோக்கிய ஏஜென்சி அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களில்தான் இந்த காப்பீடு திட்டம் அமல்படுத்த முடியும்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பாக அங்குள்ள உதவி மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
    • அடையாள உறுதிப்படுத்துதல் பணி மேற்கொள்ளப்படும்
    • சாப்ட்வேர் மூலமாக பலனாளி விவரம் பதியப்படும் என்பதால் எளிதாக மருத்துவமனை நிர்வாகத்தால் பலனாளிகளை கண்டறிய முடியும்.
    • பலனாளிக்கு இ-கார்டு கொடுக்கப்படும்.
    • இ-கார்டு மருத்துவரிடம் அளிக்கப்பட வேண்டும்.

    English summary
    Ayushman Bharat is National Health Protection Scheme, which will cover over 10 crore poor and vulnerable families (approximately 50 crore beneficiaries) providing coverage upto 5 lakh rupees per family per year for secondary and tertiary care hospitalization.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X