அசைவ உணவுக்கு தடை: "நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்க எப்படி முடிவு செய்யலாம்".. நீதிபதி நறுக்
அசைவ உணவு விற்பனைக்கு தடை குறித்த வழக்கு நடைபெற்றது
காந்திநகர்: ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிறர் முடிவு செய்ய முடியுமா? மக்கள் விரும்பியதை சாப்பிட தடை செய்யமுடியுமா?" என்று வழக்கு ஒன்றில் குஜராத் ஹைகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
"நான் என்ன சாப்பிடுகிறேனோ, அதைதான் நீயும் சாப்பிடணும்.. நான் எப்படி வாழ்கிறேனோ, அப்படித்தான் நீயும் என்னை சார்ந்து வாழ வேண்டும்" என்பது போன்ற பிம்பங்கள் சமீப காலமாக வடமாநிலங்களில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.. இது நேரடியாக இல்லாமல், மறைமுகமான திணிப்பாகவே பார்க்கப்பட்டும் வருகிறது.
இப்போதும் குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் குஜராத்திலுள்ள வதோதரா, ராஜ்கோட், பவ்நகர், ஜூனாகாத் உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் தெருவோரமாக அசைவ உணவை வழங்கும் தள்ளு வண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மருத்துவமனை
பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளுக்குத்தான் இந்த தடை என்று அறிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகவே அந்த அசைவ விற்பனை பாதிக்கப்பட்டிருக்கிறது.. எனினும் இப்படி திடீரென அறிவிப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழவே செய்தது.. இது சோஷியல் மீடியாவில் விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது..

குழந்தைகள்
அசைவ உணவு விற்பனை குழந்தைகளிடம் நெகட்டிவ் சிந்தனையை உண்டாக்கி, அதன்மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் பாஜக தலைவர்கள் கருத்து சொல்கிறார்கள்... அசைவ உணவுக்கு தடை விதிக்க காரணங்களையும் சொல்கிறார்கள்.

பழங்குடி
ஆனால், நடுநிலையாளர்கள் இந்த இரு கருத்துக்களையுமே மறுக்கிறார்கள்.. இந்துக்களின் மொத்த தொகையில் 15% பழங்குடியினத்தவரும், 7.5% பட்டியல் இனத்தவரும், 50% பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவரும் இங்கு வசிப்பதாகவும், இவர்களில் பெரும்பாலும் அசைவ உணவை சாப்பிடுபவர்கள் என்றும், அந்த அசைவ உணவிலிருந்து கிடைக்கும் புரோட்டீன் சத்து இவர்களின் உடல்நலத்துக்கு உதவுகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி ஒரு அறிவிப்பானது, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் சூழலில் இது சம்பந்தமான வழக்கு ஒன்று நடந்துள்ளது.

அகமதாபாத்
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தள்ளுவண்டிகளில் அசைவ உணவுகள் விற்பதற்கு தடை விதித்து அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை எதிர்த்து, குஜராத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.. அந்த மனுவில், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளதோடு நிர்வாகத்தினர் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், கடைகளை அடித்து நொறுக்கி தள்ளுவண்டிகளை பறிமுதல் செய்யும் அதிகாரிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

நீதிபதி
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பைரன் வைஷ்ணவ் முன்பு நடந்தது.. நகராட்சி ஆணையரை இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.. அவரிடம், நீதிபதி பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்.. முக்கியமாக, "உங்களுக்கு என்னதான் பிரச்சனை? உங்களுக்கு அசைவம் பிடிக்காது, அதுதானே? மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், இந்த சாப்பாட்டைதான் சாப்பிட வேண்டும், அசைவ சாப்பாடுகளை சாப்பிடக்கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களின் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியும்? நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்?" என்று கேட்டார்..

கரும்பு
அதுமட்டுமல்ல, "அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, இன்னைக்கு அசைவ உணவு சாப்பிட தடைபோடுபவர்கள், நாளை வெளியிலேயே சாப்பிட கூடாது என்று சொல்ல முடியுமா? அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கரும்பு ஜூஸ் விற்க தடை விதிக்க முடியுமா? என்று கேள்விகளை எழுப்பினார்.. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், விரைவில் இது தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... நிச்சயம் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் வயிற்றில் பாலை வார்ப்பது போன்ற தீர்ப்பையே நீதிபதி தருவார் என்றும், சக மனிதனுக்கான அடிப்படை உரிமையை பெற்று தருவார் என்றும் நம்பப்படுகிறது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications