போலீஸ்காரர் லஞ்சம் கேட்கிறாரா?: வாட்ஸ்ஆப் மூலம் புகார் கொடுத்தால் உடனே 'ஆக்ஷன்'
டெல்லி: டெல்லியில் செல்போனில் உள்ள வாட்ஸ்ஆப் வசதி மூலம் லஞ்சம் கேட்கும் போலீசார் குறித்து புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
டெல்லியில் பொது மக்களிடம் லஞ்சம் கேட்கும் போலீசார் குறித்து வீடியோ எடுத்து அதை செல்போனில் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்தால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் வீடியோக்களை 9910641064 என்ற செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைத்தால் சில மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை மூலம் லஞ்சம் கேட்ட 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கூடுதல் கமிஷனர் ஜி.சி. திவேதி கூறுகையில்,
இந்த முறையை டெல்லி போலீஸ் கமிஷனர் பி. எஸ். பஸ்ஸியின் அறிவுரைப்படி துவங்கினோம். காவல் துறையை லஞ்சம் இல்லா துறையாக்கவே இந்த நடவடிக்கை என்றார்.
மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில்,
இந்த செல்போன் எண் மூலம் புகார் கொடுத்தால் அந்த நபருக்கு போன் செய்து அது உண்மையா என்பதை கண்டறிகிறோம். மேலும் அந்த புகார் வீடியோவை தடயவியல் நிபுணர்கள் சோதித்து உண்மை என்று கூறினால் உடனே சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை கைது செய்து, சஸ்பெண்ட் செய்கிறோம். கடந்த 6ம் தேதி மட்டும் 14 வீடியோ புகார்கள் வந்தன. 7ம் தேதி 2 புகார்களும், 8ம் தேதி 27 புகார்களும் வந்தன என்றார்.
இந்த புகார்களில் 5 தான் உண்மையானவை, மற்றவே இத்திட்டம் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அனுப்பி வைக்கப்பட்டவை என்று துணை கமிஷனர் சிந்து பிள்ளை தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications